பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 23.1

சுடுநடைப் படுத்துவர். ‘அச்சமே கீழ்களது ஆசாரம் (10.75) என்றபடி வலியார் முன் ஒடுங்கி வால் சுருட்டி அச்சுருளை மெலியார்மேல் விரித்தடிக்கும் மாக்களே நம்முட் பலராவர். ஒழுக்கமாய் இருப்பது பெருமை என்ற கருத்து இன்னோர்க்கு இல்லை; இடம் பார்த்து அச்சத்தால் ஒழுக்கம் காட்டுவர்; வணிகம் போல் ஒழுக்கத்தைப் பண்டமாற்றுவர்; ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து (1080) என்றபடி நாண் விற்பனை செய்வர். இக்கயநிலை மாந்தர்க்கு அறிவு நடைப் பேச்சு நெஞ்சுறுத்தாது என்று மனவியல்பு கண்ட வள்ளுவர் அச்ச நடைகளைப் பலவாறு ஆண்டார்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு (204) கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின் (116)

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் -

நன்றெய்தி வாழ்வதோர் ஆறு (932) இவ்வெல்லாம் ஆசான் அன்பில் ள்.ழுந்த அச்சநடைக் குறள்கள். ஒரதிகாரம் ஒரு பொருளே நுதலுவது. அங்ஙன் இருந்தும் அதிகாரந்தோறும் குறள்பல தோன்றற்குக் காரணம் இந்நடைப் பன்மையன்றோ அறிவும் அச்சமும், போற்றலும் தூற்றலும், இரப்பும் ஏவலும், குளிர்வும் சூடும் ஆகிய பலதிறத்தால் நம்மைத் திருத்தும் ஒரே நோக்கொடு தமிழ்நடை தொடுத்தார் ஆசிரியர்; ஆதலின், நம் நெஞ்சினை இழுப்பது எந்நடைக் குறளோ, அக்குறளைச் செயற்படுத்தி வாழ்வு சிறத்தல் நம் கடன்.

4. வாழ்வியல் செல்நெறி, கொள்நெறி என இருபாற்படும் என்றேன். அவற்றுள், இதுகாறும் செல்நெறி பற்றி - பிறர்பால் நாம் ஒழுகுவது பற்றி - நடை விளக்கம் செய்தேன். இனி கொள்நெறி குறித்துக் காண்போம். நாம் நேர்மையாக நடப்பினும் பிறரெல்லாம் அங்ஙன் நடப்பர் என ஒருதலையாகத் துணிய முடியுங்கொல்வி நடப்பர் என நம்பினும் பலரால் ஏமாற்றப்படுவோம்; நடவாரெனக் கொள்ளினும் பலரால் எதிர்ப்படைவோம். ஏமாறுவதினும் எதிர்ப்பு வரவேற்கத் தக்கது. நாம் பிறரை வைதல் ஆகாது; பிறர் நம்மை