பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வள்ளுவம்

வைவரேல் என் செய்வது? நாம் ஏனையோர்க்குத் திழைத்தல் அறமன்று அன்னோர் நமக்குத் தீது விளைப்பரேல் நன்றன்று.அவர் நம் வாழ்வுக்கு ஊறுபடுத்துவரேல் என் செய்வது? @616,763rm. களுக்கு ஒரு தெளிவுடைக் குறிக்கோள் யார்க்கும் வேண்டும். பலர்க்கு இது பற்றி ஒரு கடைப்பிடி இன்மையால், மனங் கொதித்து அடித்தலும் கொல்லுதலும் செய்து திடீரென வாழ் விழக்கக் காண்கின்றோம்.

இயற்கையாக என்றும் நிலைபிறழாச் சான்றோர் மிகத் சிலரேயாவர். கோல்கொண்டு அடிக்காமையின் சீற்றங்கொள்ளாப் பாம்பின் அடக்கம்போல், பிறர் துன்பம் செய்யாமையால் ராய் அடங்கியிருப்பாரே மிகப் பலர். இவ்வடக்கத்தார் முதற்கண் யாரையும் வையார் அடியார் பகையார்; வஞ்சியார். யாராவது முந்துற்றுத் தம்மை வைது அடித்துப் பகைத்து வஞ்சிப்பரேல், தாம் பின்னர் அத் தீமையெல்லாம் பழிக்குப் பழியாக ஆற்றுவர். அவன் முன் வைதான்; யான் பின் வைதேன் எனக் கால முன்பின் மொழிவர். இன்னோர் நிலையிழந்த முன்னோடிக்குப் பின்னோடி கள்; பிறர் முறை மாறும்போதெல்லாம் தாமும் முறை மாறிக் கொள் பவர்: முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என விளக்குபவர்; தம்ககென ஓர் அசைவில் கொள்கையும் தனித் தன்மையும் இல்லாதவர்; இருத்தல் நல்லது என்ற எண்ணங்கூடக் கொள்ளாதவர். இம்முதுகோட்டம் 2......urf வாழ்க்கை ஒருபாற்படாது அலைந்து அசைந்து சீரழியப் பார்க்கின்றோம்.

நம்மொடு பழகுவார் உலகத்துப் பலர்; பல்வேறு மனப்போக் கினர். அன்னோர்க்கெல்லாம் முழுதும் சாய்ந்து சாய்ந்து தன் மனத்தைப் பலி கொடுப்பவன் மகன் எனப்படான். பண்பு விடாத் தனித்தன்மை வாழ்வின் பற்றுக்கோடும் அரணும் ஆகும். பிறர் வழிச் செல்வதால் இவ்வுலக வாழ்க்கை சிறக்கும்; வளம் கொழிக்கும் என எண்ணற்க. ஒழுக்கக் குறிக்கோள் இல்லா வாழ்வு உலகியல் அன்று: பித்தாகும்; திடீரெனச் சிதறுபடும். ஆதலின் பிறர் இகழ்ந்தாலும், அடித்தாலும்.உரிமை பறித்தாலும், காரணமின்றிப் பகைத்தாலும் எங்ஙன் நடந்துகொள்வது என்ற ஒருதலைத் துணிபு- கொள்நெறி - முன்னரே செய்து கொள்ளல் வேண்டும். நிகழ்ச்சி நடக்குங்கால்