பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை - 2

பார்த்துக் கொள்வோம் என அமைவது அறிவுப் பிழையாய் முடிவில் தீண்மயாய் உய்த்துவிடும்.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று (157) பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுனர்க நோதக்க நட்டார் செயின் (805)

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல் - (986) இவ்வனைய குறள்கள் கொள்கை யுறைப்புச் செய்யும் நடையன; பிறர் செல்நெறி மாறி நடப்பினும் நாம் பற்றத் தகும் கொள்நெறி கூறுவன. -

5. பொறுமையும் அடக்கமும் வாய்ந்தானை, வலியில்லாதவன் என்றும், ஒரொருகால் பேடி என்றுங் கூட, மதிப்போர் உலகிற் பலர். ஒழுக்கஞ் சிறந்தானை ஒரு துணிச்சலான கருமத்துக்கு ஆகான் என்று எண்ணுப. பிறர் யாது செய்யினும் தன் பண்புநிலை பிறழான் என்பது மேலிட்டு, நல்லவன் நல்லவன் என்று அழுத்தி மொழிந்து ஏமாற்ற முயல்ப வாய் புழுக்க வசை தொடுத்தாலும் மறித்து ஒர் இன்னாச் சொல் சொல்லான்; நையப் புடைத்தாலும் பையச் செல்வான் என்பது கொண்டு, ஒழுக்கப் பண்பினனை அஃதிலார் பலர் அமுக்கச் சூழுய. இஃகு உலகியல். பிறர் ஏமாற்றுதற்கு இடங் கொடுப்பானை ஒழுக்கமுடையவன் என யான் ஒருபொழுதும் சொல்லேன். பல பண்புகள் இருந்தும், பிறர் வஞ்சிப்பதற்குக் களனாகி நின்றானை, ஒழுக்கப் பேடி அறிவறை என்றே துணிந்துரைப்பன். இவ்வொழுக்க ஆனத்தான் நோய்வாய்ப்பட்ட மருத்துவன் ஒப்பான். வள்ளுவர் வேண்டுவது பிணப்பொறுமை யன்று அறிவுப் பொறுமை, அஃறிணைப் பொறையன்று; உணர்ச்சிப் பொறுமை. -

நல்லொழுக்கம் என்பது தலையாய இருகூறுபடுவது. தான் பிறர்க்குத் தீமை செய்ய அஞ்ச வேண்டும் என்பது ஒன்று. பிறர் தனக்குத் தீமை செய்யாதவாறு நன் முறையில் அச்சுறுத்தி வைத்தலும் வேண்டும் என்பது மற்றொன்று. பிறரை மாசு