பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2: () வள்ளுவம்

“என்னைப் பார்த்தாயிற்றே போ” எனச் சொல்வார் உளரோ “நான் செத்தாபோனேன் பார்க்க வருவதற்கு?” எனக் கேட்பார் உளரோ? “வந்த காரியம் என்னப்பா” என்றுதான் இயல்பாகக் கேட்ப,

பொருளஞ்சல்வழிப் பணம் போக்கினால், விடுசெலவு வருமே என்று கருதிக் கடிதத்துள் பொதிந்து ரூபாய் பத்து அனுப்புகிறான் ஒருவன். உரியானைத் தெருவில் நாலுபேர் சூழக் கண்டபோது என் முடங்கல் வந்திருக்குமே என்று வினவுகிறான். அதன் குறிப்பென்ன? ரூபாய் பத்து வந்ததா? என்பது, காணர் முடங்கலை இன்னாரிடம் கொடுத்துவிட்டேன் என்று மற்றவன் விடையிறுக் கிறான். பணத்தை நீ எழுதியானிடம் சேர்ப்பித்துவிட்டேன் என்பதன்றோ குறிப்பு. இவ்வாறு முழுக்க முழுக்க நாள்வழக்கில் சொற்களை - மொழியை - சொற்பொருள் காட்டற்கின்றி, நெஞ்சம் காட்டும் ஒரு குறிப்புக் கருவியாகவே மக்கள் பயன்கொள்ப பலபட விளம்புவானேன் வந்த விருந்தினரை வாருங்கள் என நாம் அழைப்பதும், வருகின்றோம் என அவர் சொல்லிச் செல்வது மெல்லாம், பண்பு காட்டும் கிளவிகள் அல்லவா? இணைய சொற்களுக்கு நெஞ்சப் பொருள் அல்லது நோக்குப் பொருள் தவிரச் சொற்பொருள் அப்பொழுது உண்டா?

நாள் வழக்கிற்கு நல்ல எடுத்துக்காட்டாவது அரசியல். ஒரு நாட்டு அரசுத் தலைவன் விடுத்த அறிக்கையைப் பிற நாட்டுத் தலைவர்கள் கூர்ந்து நோக்குப. அறிக்கைச் சொற்களின் வாயிலாய் அதனை விடுத்தான் நெஞ்சங்காண முயல்ப, “போரை நிறுத்தி, அமைதி செய்து கொள்வோம்” என்ற அறிக்கை காணின், எதிர் நாட்டுத் தலைவன் என்ன கருதுகிறான்? அமைதிக் காலத்துப் படையாற் றலைப் பன் மடங்கு பெருக்கிக் கொள்வான் இட்ட சூழ்ச்சி என உட்பொருள் காண்கிறான். “எங் கொள்கை உலக வமைதியே” என்னுமோர் புறத்துரை கண்டால் உள்ளே படைமிகுத்து உலகினை ஏய்ப்பான் செய்த வெளியீடு என்று கருத்துரை பகர்ப. “ஞாலத் தமைதி நாட்டவே நில நீர் வானப் படைகளைத் திரட்டுகிறோம்” என்ற புறத்தீடு காண்பவர், நினைவன யா? அச்சுறுத்திப் பிறரை அடிமை செய் நோக்கம் எனப் புகுந்து உள்ளங் கண்டாற்போல் நெஞ்சப் பொருளை விரிப்ப. “எம் நாட்டினைத் தாக்காவாறு