பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வள்ளுவம்

இனிது (230) என்ற குறள்களை ஆளும் உரிமை, இரப்பார்க்கு உண்டுகொல் நிலை பிறழ்ந்து தமக்குத் தகாக் குறள்களை ஆளுவரேல் பிறர் சினப்பர்: நகைப்பர். ஆற்றலுடையார் பொறுத்தல் நல்லது ஒறுத்தல் ஆகாது’ என்றும், செல்வமுடையார் ஈதல் கடன் என்றும் தாமே உணரல் வேண்டும். உணர்த்துவதாயின், அவர்க்குத் தீதிழையா நல்லவரும், அவர்பால் இரவா ஏற்ற முடையாரும் உணர்த்தல் வேண்டும். குற்றஞ் செய்தானும் இரவலனும் உணர்த்தப் புகுவது அறிவுக் குறும்பாகும்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் (404)

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (104)

இவ்வனைய குறள்கள் தான்உணர் நடையன. ‘உன் கருத்து உண்மையில் மிகநன்று; எனினும், நீயோ கல்லாதவன்; ஆதலின் அதனை யாம் ஏற்றுக்கொள்ளோம் என்று இக் குறள் காட்டிப் பேசுவது ஆட்சிப் பிழை. ஒருவனை ஒருவன் - மனிதனை மனிதன் - இழித்துரைக்க எழுதப்பட்டதன்று குறள். நான் கல்லாதேன் என்பதால் அன்றோ. என்னுரையைப் பிறர் மதித்திற்றிலர். நன்று: இனிக் கற்றுச் சொல்வேன்’ என்ற தன்னுணர்ச்சி பிறக்க வேண்டும் என்பதுவே இந்நடை நுட்பம். பிறவும் அன்ன.

8. சான்றாண்மை - எல்லாக் குணங்களும் உடைமை - நம் குறிக்கோளின் எல்லையாகும். சான்றோன் எனக்கேட்ட தாய் (69) என்றபடி, சால்புக் குணப்பெயர்தான் நாம் தேடும் புகழ்ப் பெயராகும். மனச்சான்றினைச் செல்வப் பண்டத்துக்கு விற்பதினும், பொருள் இழந்தேனும் குணம் பெருக்குவதே நம் வணிகமாகும். இவ்வெல்லாம் எண்ணத் துணிபுகள். குணம் நிறைந்தாரினும், மறைந்தொழுகும் மாந்தர் பலர் (278). வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் (514) என்றாற்போல், குற்றம் குடி கொண்டாரே - குடி கொள்ள முந்துற்று இடங் கொடுப் பவரே - நம்முட் பலர். இன்னோரைத் திருத்தும் கடன் பூண்டவர் , மாணாக்கன்பால் ஒலிப்பிழை, எழுத்துப்பிழை, சொற்பிழை.இலக்கணப்பிழை, கருத்துப்பிழை எனப் பிழை மலிவு