பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 237

கண்ட தமிழாசான் மலையான்: கை விடான்; ஒரேயடியாக அனைத்துவகைப் பிழையையும் திருத்த முயலான்: முயன்று மாணவனை வெருவரச் செய்யான்; செம்மையாக்கிக் கொள்ளவந்த நன்மாணாக்கன்தன் திருந்தும் உணர்ச்சியைச் சிறிதும் மழுக்கான். தொட்ட இடமெல்லாம் பிழை தோன்றினும், இவன் மொழிப்புண் அம்மைத் தழும்புபோல் மெல்ல ஆறுக’ என்ற கருத்தால், தமிழாசான், ஏனைப் பிழைகள் நிற்க, முதற்கண் ஒலித்திருத்தம் செய்வான்; செயலூட்டுவான்.

வள்ளுவர் தனக்கு உவமை இல்லா ஒழுக்கப் பேராசான்: செயல்வேந்தன். ஒருவன்கண் எத்துணைக் குணப்பிழை காணி னும், இனித் திருந்தான் என ஒதுக்கிவிடார். அவன் உயிருள்ளவரை ஒழுக்கத் திருத்தத்துக்கும் பதம் உண்டு என்ற துணிவால், மனநாடி பார்த்துச் செயல் மருந்து ஊட்டுவர். மருத்துவன் சொல்லு மாப்போல், உன்பால் மாசுகள் பலவுள. உனக்கு நல்வாழ்வில்லை என்று பின்னடையற்க. முதற்கண், தம்பி இம்மாசினைப் போக்கிக்கொள்’ என விட்டுவிடாது இசைப்பர். எவனொருவன் தன் குறள் நூலை எடுத்துக் கற்கின்றானோ, கற்கும் அம்மனப் பக்குவம் ஒன்றே, திருந்தும் உள்ளமுடையான் அவன் என்பதற்குப் போதிய சான்று என்ற தெளிவால், தீமை பல செறிந்தானுக்கும் ஒரு தூய்மை மருந்து எழுதுவர். யான் அளவிறந்த குற்றம் உடையேன் என்றானை, அவன் தோள் புறம் தழுவி மார்புரம் காட்டி, நம்பி பலகிடக்க. இம் முதற் குற்றத்தை அகற்றிக்கொள் என்று ஒர் அறவழிப் படுத்துவர். வாங்கிய கடனை அடைக்கும் முழுமணம் இல்லாதவன்பால், நீ செலுத்துவதைச் செலுத்துக’ என்று தருமுணர்வு ஊட்டுமாப்போல், இச்சிறுமையையேனும் காத்துக் கொள்வையேல், நீயும் போற்றற்கு உரியை எனப் பல்புரை யோடினானைப் பார்த்து, அவன் உளம் மகிழ ஒரு சிறு செயல் நல்லுணர்வு பாய்ச்சுவர். - அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது (181) பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை - (852)