பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 வள்ளுவம்

செல்வம் ஈட்டிக் கொடுத்தல்’ என்னும் பெற்றோர் மயக்க எண்ணத்தைக் குறிப்பால் மறுப்பர். வாய்மையாவது, தீமையிலாத சொலல் (291) என்ற பட்டாங்கு மொழிவால், ‘வெறுமனே நிகழ்ந்தது கூறல் என்னும் மாந்தரின் பொய்க் கொள்கையைக் குறிப்பினால் அகற்றுவர். இவ்வெல்லாம் குறிப்பு விளக்கு நடையன. வள்ளுவர் உள்ளதுடி கூறும் கருத்தால், மறைமுகமாய் உடைத் தெறிந்த போலிக்கோள்கள் இவை என்று உய்த்துணர்தல் நம் அறிவின் தொழில்.

10. உணவு, உடை, அணி, ஊர்தி, வீடு முதலாய புறவளன் பெருக்கும் ஒரு L மக்களே சாலப் பலர். மனங்கூசாது ஒழுக்கம் இறந்தும், உயிர் வழங்கியும் கூடப் புறவாழ்வு காண முனைவார் சிலரல்லர். தம் காரியம் வரும்போது நல்லொழுக் கத்துக்குப் பலவாறு கருத்துக் கூறிக்கொள்வர். உண்மைப் பற்று வினை செய்யுங்காலைச் சிறிதாவது செயலாதல் வேண்டும். பல்லோர்தம் உள் நடப்புக்களைச் சீர்தூக்கின், நாம் அறியக் கிடப்பது என்ன? ‘வினை வேறு சொல்வேறு பட்டார் (819) என்றபடி, இன்னோர்க்குத் தன் நெஞ்சு அறிந்த வாய்மைப் பற்றும் தூய்மைத் துணிவும் இல்லை என்பது வெளிப்படை.

‘அழுக்கற்றும் வெஃகியும் பொய்த்தும் களவு செய்தும் பலரைக் கொன்றுங்கூட, என் கண்முன், இன்னின்னோர் சிறந்து வாழ் கின்றனரே. குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் (171) என்ற கேடு இன்னோரை எய்தவில்லையே: அரிய இனிய கொழுப்புணவு. சிலுசிலுவென்னும் பட்டாடை, வயிரப் பொற்கலன், ஆண்டுப் புதிய கார், அடுக்கிய மாடமாளிகை, பிறபல கால நலங்களையெல்லாம், திருமகள் முகவரி அறிந்து இன்னோர்க்கு அன்றே உய்க்கின்றனள்: வாழ்வு கொழிக்கவேண்டின் குற்றத்திற்கு அஞ்சப்படாது’ என்று பெரும்பாலான மக்கள் தம் மனத்துள் நம்பி வேலை செய்ப. ஒரொருகால் தோன்றும் ஒழுக்க அரும்பினை முளையாமுன் கிள்ளிவிடுப. தீயவை தியபயக்கும் என்பது பலர் தம் வாய்ச் சொல்லேயன்றி வாழ்வுப்பிடி இல்லை.

ஒருவன் வாழ்விற்கு எத்துணையோ காரணங்கள் துணை யாவன. அவ்வெல்லாம் மற்றையோர்க்குப் புலனாவதன்று.