பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 241

சிலபொழுது அவனுக்குக்கூடப் புலனாவதில்லை. களவுக் குற்றம் உடையான் ஒருத்தன் அதனினும் பெருங் கொடையாளியாய் இருப்பன். அறிவிலாதான் தன்பக்கம் அறிவுடையார் பலரைத் துணைவராகப் பெற்றிருப்பன். ஒருகால் கொடுமை நிரம்பியவன், பேரிரக்கத்தனாக இருப்பன். குற்றம்பல புரிபவன் அவற்றை மறைக்க வல்ல அறிவுக்கூர்மையனாக இருப்பன். ஒருவனின் அனைத்து மனவோட்டங்களையும் புறத்தோர் அறிதற்கியலாது. தம் நெஞ்சத்துப் போக்குவரவுகளைக் கூடச் செவ்வன் பிறழ்வின்றிக் கணித்துக் கொள்ள மாட்டா மக்கள் பிறர் நெஞ்சத்தை உள்ளவாறு அறிதல் என்பது எளிய செயலன்றுகாண்; பெரும்பாலும் பிழைபடுவது காண்.

நூறடி உயரத்திலிருந்து ஒருவன் விழுந்தான்; காயம் ஒன்றும் இன்றிப் பிழைத்துக்கொண்டான் என்பது கண்டு, மற்றொருவன் அவ்வுயரம் ஏறிவிழத் துணிவானா? நூற்றைந்து திகிரி ஒருவன் உடம்பு காய்ந்தது; மருந்துச் செலவு மிகுதியின்றிச் சின்னாளில் நலம் எய்திற்று என்பது அறிந்து, காயல் சிறிது வரப்பெற்ற மற்றொருவன் என்னுடலும் நூற்றைந்து திகிரி காய்க; பின் நலமெய்துக’ என்று வ்ாளா இருப்பானோ தீமை தீது தரும் என்பது வள்ளுவம்; எனினும், ஆற்றல் மிகுந்தானை ஒரளவே தாக்கும். எனவும், ஆற்றல் குறைந்தானை உரிய அளவு தாக்கிவிடும் எனவும் நாம் தெளியவேண்டும். ஒரே நோய் உடல் வன்மைக்கும் மனவுரத் துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப வலி செய்யுமாப் போல, ஒரே குற்றமும் செய்தான் பிற குண நலத்துக்கு ஏற்பத் தீது விளைக்கும். உடலின்கண் எதிர்ப்பாற்றல் மிகுந்திருப்பின், நோய் சிறிது தாக்கியவளவில் தணிந்துவிடும்; அஃதொப்ப, ஒருவன்பால் பிறகுணச் சிறப்பு அளவிறந்து இருப்பின், அவன் செய்தீமை பெருங்கேடு செய்யாது குன்றிப்போம். ஆதலின் ஒருவன் புறநல் வாழ்விற்கு நுண்ணிய அடிப்படை ஒரு பெருங் குணச்சிறப்பே என்று கொள்க. குணங் குறைந்து அதனினும் குற்றம் பெருகி விடுமேல், அவன் அழிவு யார்க்கும் வெளிப்படையாத் தோன்றும்.

‘யான் பேராற்றல் உடையேன், அரிய சில பண்புகளும் உடையேன். ஆதலின் எனைத்துக் குற்றம் செய்தாலும் பெருங்கேடு Di. 6 .