பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 வள்ளுவம்

வராது என்று மயங்குவது பெரும் பேதைமை அழிவுச் செருக்கு. பணத்தைத் துல்லிதமாய் எண்ணிக் கணக்குச் செய்வதுபோல, யாரும் தன் உள்ளாற்றலை இவ்வளவிற்றென அளந்துகொள்ள முடியாது. மேலும் தீமை கெடுவலியும் மிக்கது. கெடுந்துணையும் பல உடையது. பல்குணச் சிறப்பும் ஒரு தீமையால் தொலைந்துவிடும். அணையாது வைத்த அடுப்பின் நெருப்புத் துண்டால், வீடுமுழுதும் எரியுண்ணக் காணுதும் அன்றோ ஊசி குத்தினாற் போலும் ஒருசிறு ஒட்டை அடியில் விழின் பெரும் பானையும் பாழாகும் அன்றோ? ஆதலின், குற்றமே காக்க பொருளாக (434) என்ற வள்ளுவ நினைவு எனைவகைச் சான்றோர்க்கும் வேண்டற்பாலது.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும் (283) மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு (454) அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். (169)

இவ்வனைய குறள்கள் முன்னறிவிப்பு நடைகொண்டன. ‘குற்றத்தை வரவழைத்துக்கொண்டும், சுமக்கும் உரமுடையேன் என்று தருக்குவது தன்னேய்ப்பாகும்; வாழ்க்கை சடக்கென முரிவாகும். ஒழுக்கம் பல கெட்டும் உண்டு உடுத்து அணிந்து ஒய்யாரமாய் வாழ்வார் உளரேல், அப்பிறரை வழிகாட்டியெனத் தன் நெஞ்சத்துள் பற்றுவது தீயோடு விளையாடுவதை ஒக்கும்; ஆதலின், தன் ஆற்றல் சிறிதாகுக; பெரிதாகுக: அஃதோர் நிலைக்களன் அன்று. தீய வினை செய்ய என்றும் அஞ்சுவதே அறிவுடைமை.

11. ஒருசார் மக்கள் நாம் பன்முறை வேண்டிக் கொள்ளினும், அவ்வேண்டுகைக்குச் செவிசாய்க்க மாட்டார்கள். நாம் தாழத் தாழ, மரக்கொம்பின் நுனிக்கு ஏறிக்கொள்ப. தாயன்பைக் குழந்தை பேணாது நடக்குமாங்கு, இன்னோரும் நம் அறிவுரையை இகழ்ந்து செல்ப. நாம் அவர்தம் வாழ்க்கை முன்னேற்றத்தில் அக்கரை காட்டுவதாக அறியின், அதன் வழியாக நம்மையே சுரண்டி வாழ நினைப்ப. காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் (440)