பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 2.43

என்னுமாங்கு, நம் சொல்லைப் பேணாதார்பால் நாமும் பேணாதேம் போல் நடக்க வேண்டும். அவரைத் தம்வழி அலையவிட்டுப் பிடிப்பது இந்நடப்பின் பயன். திருந்துமின் திருந்துமின் என்று பல்கால் வழியுணர்ச்சி கற்பிப்பதினும், ‘அன்ப! என்னை விட்டுப்போ. கெட்டொழி என்று எதிர்ப்புணர்ச்சி காட்டல் சிலர்பால் நினைந்த பயனைப் பயக்கும்.

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்

ஆற்று பவர்கண் இழுக்கு (893)

உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார் (922)

என்ற குறள்கள் பேணா நடையில் அமைந்தன; விட்டுத் திருத்தும் நெஞ்சுடையன. .

செயல் வேண்டும் என்னும் ஒரே நோக்கு வைத்துத்தான் வள்ளுவச் சொற்பொழிவுகளைத் தொடக்க முதல் ஆற்றி வருகின்றேன் என்பதை நீவிர் அறிவீர். திருக்குறளெல்லாம் செயலுலகிற்கு எழுதப்பட்டன என்ற உண்மையை நீவிர் இதுகாறும் ஐயந்திரிபறத் தெளிந்திருப்பீர். உவமை நயம், சொன்னயம், பொருள் நயம், மெய்ப்பாட்டு நயம், இலக்கண நயம், குறிப்பு நயம், தொடை நயம், ஒப்புமை நயம் என்ற பல்வகை நூல்நயம் காட்டும் நோக்கோடு திருக்குறள் நடைச் சொற்பொழிவைப் பேசலா மாயினும், யான் அவ்வழிச் செல்லவில்லை. துணிந்தெடுத்த தனிச்செயல் நோக்கம் தொட்டவிடமெல்லாம் தோன்றுமாறு நாட்டிச் செல்லுவல். -

12. எனைப் பெரியோரும் செய்க என வேண்டுவர்; உளம் பதியுமாறு இயம்புவர். உணவு உட்கோடல் போல், செயல் மேற்கோடல் அவரவர் தொழில். யார்க்கும் செயல் மனம் பிறக்குமாறு பற்பல நடைகளை ஆளுவர் வள்ளுவர்; அரிய பொருளையும் எளிய பொருளாகக் காட்டுவர். மதுரை மூதூர் யாது எனப் புகார் நகரத்திருந்து வினவிய கண்ணகிக்கு ஆறைங் காதம் நம் அகன் நாட்டு உம்பர், நாறைங் கூந்தல் நனித்து’ என்று மலையாதபடி விடையிறுத்தாங்கு ஆர்வமும் செயலும் தோன்ற நடையாப்பர்; ‘இப்படிச் செய்யின் இப்பயன் பெறுவை என எச்சநடையை