பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நடை 245

உணர்த்த முடிகின்றது. இவ்வுள்ளப் பண்பை நிலைக்களனாகக் கொண்டு ஒழுக்கப் பண்பை வலியுறுத்த விரும்பினார் வள்ளுவர். விருந்தோம்பலும், கற்புத் திண்மையும், கரவா ஈகையும், குன்றா ஊக்கமும் பெருவாழ்வு அளிப்பன என்று கற்பவர்தம் உளம் பதியும்பொருட்டு, வித்தும் இடல் வேண்டுங்கொல்லோ, (85), பெய்யெனப் பெய்யும் மழை (55), கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்குங் கொல்லோ (1070), ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் (594) எனப் பெருநடை மேற்கொண்டார்.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு - (1187) நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து (1128) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் (1120)

இவ்வனைய குறள்கள் உளப் பதிவு செய்யும் இலக்கிய நடையன; அளவினும் மிகுந்த தம் எண்ண உயர்ச்சியைப் பிறர்க்கு ஒரளவேனும் உணர்த்த வல்ல அழுத்த நடையன. இந்நடையாட்சி அறத்துப் பால் பொருட்பால்களிலும் காமத்துப் பாலில் பெருவரவிற்று.

. 14. காவியப் புலவன் தன் நூலுள் வரும் மக்கள் கூற்றாகவே நின்று பெரும்பகுதி பேசுவான். பிரிந்து நின்று தன் கூற்றாக அவன் சொல்லும் இடங்கள் சிலவேயாகும். வழிகாட்டும் வாழ்க்கைப் புலவனோ, உணர்ச்சியூட்டும் பொருட்டு, கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது (772) என்றவாறு சில பொது மக்கள் கூற்றாக மொழியினும், நமக்கு அறிவறையும் பொருட்டுப் பல்காலும் தன் கூற்றாகவே மொழிவான். அரசனாய்க் கட்டளை நடையில் பகராது, அன்பனாய் உழையிருந்து அனைவு நடையில் அறிவு தருவான். தீமை செய்யத் துண்டும் பிறர்உள்ளக் கிடக்கைகளைத் தன்மனத்து வாங்கிக்கொண்டு அறங்கூறுவான். மக்களின் உள்ளோட்டங்களைக் கண்டு கொள்ளாது வள்ளுவர் அறங்கூறியிருப்பரேல், திருக்குறள் மனங்