பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 2 i

காப்பான், முன்னறிவொடு எம் எல்லைக்குள் படை வைத்துள் ளோம்” என்றால், நம்பிக்கை பிறக்கிறதா? இல்லை. இல்லை. படைமுனை காட்டி இணைக்கப்பார்ப்பார் என்று பறை சாற்றுப. இந்நிகரணவாய் அரசியலுலகில் நாம் காணும் செய்திகள் எண் கடந்தன.

அரசியல் தலைவர்கள் இகல் நோக்கத்தானும் பகல் நோக்கத் தானும், மக்கள் நலங் கொளாது, பொய் மானம் பற்றி, வேண்டாது கிளறிப் பார்க்கும் அளவிறந்த ஆகா மதியானும், அறிக்கை விடுத்தவர்தம் உண்மை நெஞ்சம் காணப் பல்காலும் பிழைத்து விடுகின்றனர் என்றாலும், அறிக்கைச் சொற்கிடை முறைப்படி அறிக்கையாளன் நெஞ்சம் காணவேண்டும் இன்றியமையாமையை யாரும் உடன் படுவர். அறிக்கைச் சொற்பொருளே பொருளெனத் துணியார். இதுகாறும் நோக்கு என்னும் அரியவற்றுள் அரிய கருவியை வழக்குச் செயல்களில் வைத்து அறிந்தோம். இனி இலக்கிய உலகில் ஒர் எடுத்துக்காட்டுத் தந்து நிறுத்துவேன்.

சங்க நெடும்பாட்டாய அகநானூற்றிலிருந்து ஒரு சிறுதொடர். சோலையிடை நிற்கும் தலைவி, மருங்கில் நிற்கும் தன் தோழியை விளித்து, இவன் மகனே தோழி என்று சுட்டுகிறாள். இம்மூன்றே தலைவி சொல்லிய சொற்கள். இவன், மகனே, தோழி என்னும் இக்கிளவிகள் அருஞ்சொற்களா? தமிழ்த் தாயாகப் பிறந்த எவரும். குழவி நிலைதொட்டு இச்சொற்களின் பொருளை யறிவர். ஆனால் ஒன்று நினைமின் அன்னோர் தெரிந்தவை சொற்பொருள்: நிகண்டுப் பொருள்; அவ்வளவுதான். சொன்ன தலைவியின் நெஞ்சப் பொருளல்ல; நோக்குப் பொருளல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு. அது சொற்பொருள் எனப்படும். இதனை எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்காப்பியம். இச் சொற்பொருள்களைப் பழைய நிகண்டு களிலும் புதிய அகர நூல்களிலும் கற்கலாம். சொற்பொருட் கல்வி யார்க்கும் எளிது. சொல்லுக்குப் பொருள் அனைவர்க்கும் பெரும்பாலும் எல்லாக் காலத்திற்கும் இடத்திற்கும் ஒன்றாகவே அமையும். இனி ஒவ்வொரு சொல்லுக்கும் இயல்பான சொற்பொரு ளோடு உடன்கலக்கும் நெஞ்சப்பொருளும் ஒன்று உண்டு.