பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வள்ளுவம்

இசைவதே கண்ணோட்ட வள்ளுவம் என்று மாறிக் கொள்வர். அளவினான் கண்ணோட்டம் இல்லாத கண் (574), ‘கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு (578) என்ற அதிகாரப் பிற குறள்களையும் காணும்போதுதான். கண்ணோட்ட வள்ளுவமாவது “பிறர்க்கு இன்னா செய்யா நட்புதவி என்ற முழுத் தன்மை தெளியப்படும்.

காக்க பொருளா அடக்கத்தை (122) என்ற குறளொன்றை மாத்திரம் கற்று, போதும் என்று அமைந்த மனத்தினர், கைகட்டி வாய்பொத்தி உடல் சுருட்டி அறிவொடுங்கிய காட்சிதான் வள்ளுவர் சொல்லும் அடக்கம் எனப் பொதிந்து கொள்வர். யாதும் பேசாது, கேட்டவற்றை யெல்லாம் தலையசைவால் ஒப்பிக் குனிந்து முன்னிற்கும் கூழையனையே, என்ன அடக்கம் எனப் போலிப் பெரியவர் பலர் புகழக் காண்கிறோம். மக்கட் பிறப்பிற்கே உரிய ஒருமகன் அறிவு, மற்றொருவன் முன் செயலற்று மடிவதை அடக்கம் எனச் சொல்பவர்கொல் வள்ளுவர்? அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் (123) என்பது குறள். அறிவு அடங்கப்பெறின் ETGT நடைப்படுத்தாமை காண்க. அடங்கியான் தோற்றம் மலையினும் மானப்பெரிது’ (124) என இசைப்பரேல், அவர் சொல்லும் அடக்கம் நாம் பலர்பால் காணும் - பலர் நம்பால் எதிர்பார்க்கும் - உடல் முடக்கம் அன்று என்பது பெறப்படும். அடக்க வள்ளுவமாவது அறிவுப் பெருமையும் ஏறுபோல் பீடு நடையும் செறிந்த ஐம்புல மனவடக்கம் என்று அறிக.

ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே

செல்லும்வா யெல்லாம் செயல் r (33) மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற (34)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் (35)

இவை அறத்தெளிவு பயக்கும் அதிகார நடையன. அறமாவது இடையறாச் செய்கை: வினை செய்யுங்கால் மாசின்மை;