பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 253

யான் துணிந்த செயலொரு நோக்கில் வைத்துங் கூட இன்னும் பல சொற்பொழிவுகள் ஆற்ற இடனுண்டு. அவ்வெல்லாம் கற்பவர்தம் முயற்சிக்குப் பொருளாகுக என்று அமைந்து, தவச்சில வற்றையே இற்றைச் சொற்பொழிவில் விளக்குவான் முற்படு கின்றேன். யான் ஆசிரியத் தொழிலாளி, வினவி வினவி மாணாக் கர்க்கு அறிவுறுப்பது அத்தொழிலின் நன்முறை; ஆதலின், உம்மனோர் ஐயங்களை வினாவடிவாக வரைந்து எம்பாற் கொடுமின். விடை வடிவாக ஒருசொற்பொழிவு செய்வல், என்று என்னை அணுகிய நமர்க்கு மறுமொழிந்தேன். என் வேண்டுகோட்கு இசைந்து வரைந்து உதவிய வினாக்கள் எண்ணிறந்தன. அவற்றுள், பல வினாக்கள் ஒன்றுபோல் இருந்தமையால், கழித்துப் பொறுக்கிச் சிலவற்றைத் தேர்ந்து கொண்டேன். முறையாக இனி அவை பற்றிய ஆசான் கருத்துக்களை நுணுகுவாம். இவ்வாராய்ச்சியின் முடிபைக் கொள்ளுக; தள்ளுக. அது நும் அறிவுரிமை. தள்ளுங்கால், ஆய்ந்தானுக்கு மனமாசு கற்பியாது ஒழுகுமின் என்பது என் பணிந்த வேண்டுகோள்.

1. திருவள்ளுவர்தம் கடவுட் கொள்கை யாது?

அன்பர்கள் விடுத்த அளவிறந்த வினாக்களுள், கடவுள் வினாவை முதற்கண் தெரிப்பதாக உவப்போடு எடுத்துக் கொண்டேன். வாழ்வு முழுமைக்கும் இன்றியமையாதது என்ற உண்மையால்.

கடவுள் என்னும் சொல் திருக்குறளகத்து ஓரிடத்தும் இன்மையை முதலாவதாகக் குறிக்கொள்மின் இக்கிளவியை ஆளாமையானே, கடவுட் கொள்கை இல்லாதவர் நம் வள்ளுவர் என மயங்க வேண்டா. இச்சொல்லாட்சி யின்மையை வேறொரு கருத்திற் காக நினைவுறுத்தினேன். தந்நூலின் முதலதிகாரத்து, ஒன்பது குறள்காறும் ஆதிபகவன், வாலறிவன் என வாங்கு, ஒன்பது தனிப் பெயரிட்டுக் குறள் யாக்கக் காண்கின்றோம். அவற்றுள் இறைவன்’ (5) என்பது இப்பெயரின் பொருள். பத்தாவது குறட்கண் கடவுள் அடி சேராதார் என்று புதுச் சொற் பெய்ய வாய்ப்பிருந்தும், ‘இறைவன் அடிசேராதார் (10) என. முன் சொன்ன பெயரையே