பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வள்ளுவம்

ஆனான் தன்னை” என்றும் இருமைப்படுத்துவர் திருநாவுக்கரசர். இங்ஙன் குணப்பொதுவாய் நிற்கும் இறைவனை வள்ளுவர் சால்புத் தனி நிலைப்படுத்தினார்; மக்கள் வாழ்க்கையை உயர்த்தா இறைக்கொள்கை பயனின்று என்ற துணிவால், ஆதிபகவனைத் தூய இறைவனாகப் பிரித்து வடித்துக் காட்டினார்: வாலறிவனாக, வேண்டுதல் வேண்டாமை யிலானாக, பொறிவாயில் ஐந்தவித் தானாக, அறவாழி அந்தணனாக, எண் குணத்தானாகப் பண்புருவம் செய்து கொடுத்தார்; அவன் திருவடியை, நற்றாள் “மாண்டி என நல்லடைப்படுத்தினார். இவ்வண்ணம் உலக முதல்வனை-பொதுக் குணத்தவனை - ஒழுக்கத் தனி முதல்வனாக நமக்கு அறிமுகப்படுத்தியமையால், அவனை நினைவால் தொழும் நாமும் வாலறிவராக, பற்றற்றவராக, ஐந்தவித்தவராக. அறவாழி அந்தண்மையராக வளரல் வேண்டும் என்பது வள்ளுவம்.

எவ்வாற்றானும் வலிபெருக்கும் முனைப்பே மக்கள்பால் துடித்து நிற்கின்றது என்றும், பெருகிய அகப்புற ஆற்றலை நல்லாட்சிப் படுத்தும் தூயவுணர்வு அன்னோர்பால் துடித்து நிற்கவில்லை என்றும் கண்டு கொண்ட உலகப் போா இறைமையைப் பிரிவில் இருகூறுகளாக - தூய தலாக - வெளிப்படுத்தினார். ஒழுக்க மிலா ஆற்றலான் மை இழைப்பான். ஆற்றலில்லா ஒழுக்கத்தான் தீமை விளைக்க இடங்கொடுப்பான். இறைமையுடையான் - ஒழுக்க உரவோன் - தீது அகற்றி நன்மையே செய்வான்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)

‘ஐந்தவித்தான் என்பது பேராற்றலையும், ஒழுக்க நெறி’ என்பது ஆற்றலை நெறிப்படுத்தும் தூய்மையையும் ஒருங்கு சுட்டி நிற்பக் காண்மின் வினையாற்றலும் மனத்துய்மையும் இக்குறட்கண் வள்ளுவர் உறுத்தும் பிரிவில் இறைக்கூறுகள் அல்லவா? இறை நெறியைப் பலர் உளறுமாப் போல அறிவுக்கு விளங்கா நெறி யாக்காது, வாழ்வுக்குப் பின்னெறி யாக்காது, அறிவு நெறியாக, வாழ்க்கைச் செயல் நெறியாக, நன்றாகக் குறிக்கொண்மின் - ஒழுக்க நெறியாகக் காண்பது வள்ளுவ இறைமை. பல்வேறு