பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 வள்ளுவம்

படையற்க. இவ்வெல்லாம் நெஞ்சறிவுடையார்க்கு ஒரு பூசற் பொருளல்ல. நிகரில் சிறந்த பெரியார்களுங் கூட, இறைவன் எங்கும் நிறைந்த பொதுப் பொருள் என்று உணர்ந்திருப்பினும், தத்தம் சமயப் பிடிப்பட்டு இதுதான் கடவுள் வடிவு. இதுதான் கடவுட்கரணம். இதுதான் தெய்வ மந்திரம். இதுதான் தெய்வச் சமயம் என இறைக் குறுநெறி பரப்பினர். இறை நிலையில், ஒருவர்க்கு ஒத்தது ஒருவர்க்கு ஒவ்வாமையும் உண்டு என்ற நினைவின்மை யால், தம்மனத்துக்குப் பிடித்தது பிறர் மனத்துக்கும் பிடிக்கும் என்ற மயக்கத்தால், எனைப் பெரிய மதச் சான்றோரும் ஒருவடிவும் ஒரு சடங்கும் ஒரு மந்திரமுமாகவே முற்றுப் புள்ளி வைத்தனர்; இறை நிலைக்கண், விரிந்து பரந்த தூய எண்ண வளர்ச்சிக்கு இடம் அருளாது, கணக்குத் துறை போலக் கட்டிறுதி செய்தனர்; அறிவுக்கும் மனத்துக்கும் மீளா அடிமை புகுத்தினர். இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட் டொனாதே எனத் தெளிந்திருந்தும், புகழ்சான்ற அருட் பெருமக்களுங் கூட, வேற்றுக்குறியார், வேற்றுக் கரணத்தார். வேற்று மந்திரத்தார், வேற்று மதத்தார் என்ற ஒரே காரணத்தால் இகலி, பூசல் பல விளைத்தனர்; தமவல்லாப் பிறமதமெல்லாம் அல்நெறி யெனத் தூற்றினர்.

இணைய வழுநிலையி னின்றும் தப்பி நடந்த ஒரு தனித் தோன்றல் நம் வள்ளுவத் தமிழ் மகன், காணிர். இறைமை வேண்டி, அதற்கு ஒரு தனிஉருவமோ, கரணமோ, மந்திரமோ, இடமோ, பிற புறவோ சுட்டாதவர்; மக்களின் தூய தனி விருப்பத்துக்கு விட்டருளியவர்: இறைவனைக் குணத்தவனாகவும், அவன் நெறியை ஒழுக்க நெறியாகவும் சுட்டி அமைந்தவர். எவ்வுரு எனக்குத் தூய வாற்றலை வழங்கும், அஃது என் இறை வடிவு. எவ் வழிபாடு என் வஞ்சகத்தைக் கொல்லும், அஃது என் இறைக்கரணம். எவ்விடம் என் நெஞ்சுக்குத் துய்மை பாய்ச்சும், அஃது என் கோயில். எச்சொல் என் அகத்துக்கு உரம் நல்கும், அஃது என் மந்திரம். எவ்வினை என் வாழ்வைத் தூயதாக மடியின்றி ஊக்கும், அஃது என் இறைவினை. எந்நூல் எனக்குத் தூய எதிர்காலவுணர்வைக் கற்பிக்கும், அஃது என் முதனூல். எந்நெறி காலத்திற்குத்தக உலகப்