பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 வள்ளுவம்

பணி, மொழிப்பணி. கல்விப்பணி, ஏழைப்பணி, உயிர்ப்பணி எல்லாம் இறைப்பணிகள் அல்லவா? யார் செய்வது எவ்வினை யாயினும் ஆகுக! அவ்வினை பொய்யற்ற வழி - தூய்தாயபோது - இறைவினையே என்று கடைப்பிடிக்க. ஒருவர் தம் புறவாழ்க்கை எத்துறைப் படினும் படுக: ஒழுக்கநெறி தழுவிய காலை, அவர் வாழ்க்கை இறை வாழ்க்கையாம் என்று தெரித்தற் கன்றே, இறையதிகாரத்தை நூலின் முதலதிகாரமாக நிறுத்தி வைத்தனர்; ஆதலின், வஞ்சக மற்ற வினை இறை வள்ளுவம் எனத் தெளிக.

3. எண்ணிறந்த கோடி கோடி மக்களை - இறைப்பண்பு வளர்க்க வேண்டிய அன்னோரை - விரல் விட்டு எண்ணத்தகும் (5 சில குறிகளையே வணங்குமாறும், ஒரு சில கரணங்களையே செய்யுமாறும், ஒரு சில மொழிகளையே ஒதுமாறும், ஒரு சில சமயங்களுள்ளே புகுதுமாறும், வன்கண்மையாக அடிமைப்படுத்தி வருகின்றோம். இறை நிலையில் - தன்நெஞ்சு தூய்மை பெறும் மெய்ந்நெறியில் - ஒருவன் உரிமை பெறானேல், வேறு நிலையில் அவன் பெறும் உரிமையெல்லாம் என் பயன் செய்யும்? மனவடிமைப்படுத்தும் மதக் கரணங்களையே வளர்க்கின்றோம் அன்றி, மனம் தூய்தாக்கும் உரிமை யுணர்ச்சிகளை வளர்த்தோம் அல்லம். இறை நெறியாக அகத்துய்மையை வலியுறுத்தி, நின் மனத்துக்குத் தகப் புறச்சார்பு கொள்க என விடுதலை வழங்கிய பெருமகன் வள்ளுவர். பற்றுக பற்றற்றான் பற்றினை (350) என இறைப்பற்றுக் காட்டி, புறப்பற்றுக்கோ டெல்லாம் நின் அறிவினாற் கொள்க என்று உரிமை யருளியவர் வள்ளுவத் தோன்றல்.

இன்றியமையா இறைமையை நாம் பெருக்கிக் கொள்வது எங்ஙனம்? பிறப்பொடு அமைந்து கிடக்கும் இறையளவை இடையறாது வளர்த்துக் கோடல் யாங்ஙனம்? இது பற்றி ஆசான் காட்டும் முறை யாது ‘அடிசேர்ந்தார் என்பதனால் இடையறாத் தூய நினைவும், பொருள் சேர் புகழ் புரிந்தார் என்பதனால் தூய சொல்லும், ஒழுக்க நெறி நின்றார் என்பதனால் தூய செயலும் இறைமைகளாக வகுத்துக் காட்டுவது வள்ளுவம். சொல்லும் செயலும் நினைவின் குழவிகள்: ஆதலின் இறையதிகாரத்துப் பல குறள்களால் தாள் சேர்தலைப் பற்றியே - நினைவொழுக்கம்