பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 வள்ளுவம்

யிலான் அடி சேர்ந்தார்க்கு’ என்ற அடிக்கு பற்றற்று நினைப் பவர்க்கு என்பது உள்ளுறை. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார்’ என்ற அடிக்கு, புலனைந்தும் அடக்கி வஞ்சமின்றி ஒழுகுவார்க்கு’ என்பது பொருளுரை. “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார் என்ற அடிக்கு. அறமும் அருளும் நினைவார் என்பது உட்கிடை இறைவன் அடிசேராதார். என்ற அடிக்கு உள்ளுறை முதல்வனை நினையாதார் என்பது மெய்யுரை. எனவே நாம் அகந்துயராய் இடையறாது வாழ்க்கை முழுதும் நினையத்தகுவன இறை முதன்மையும், வாலறிவும், அவாவின்மையும், புலனடக்கமும், அறமும், அந்தண்மையும், பொய்யாமையும், ஒழுக்க நெறியும் ஆம் என்பது திருவள்ளுவம்.

2. திருக்குறட்கண் முரண்கள் பல உளவே அவற்றுக்கு நீர் கூறும் அமைதி என்னை?

‘நீ களவாடிய பொருளை யாரிடம் கொடுத்து வைத்திருக் கிறாய்?” என்று வழக்கறிஞன் மடக்கி வினவுமாப்போல, இந்நண்பர் உள்ளொன்று வைத்து வினவுகின்றார். குறளகத்து முரண்கள் உள என யான் உடன்பட்டதாகத் தாமே கொண்டு. என்பால் அமைதிக் காரணம் மட்டும் வேண்டுகின்றார். நன்று. நன்று. காணுமுன், உண்டா வழுக்கள்? எனக் காணவேண்டுமன்றோ? பொதுவறம் கரைவது திருக்குறள் என்றும், செயற்கு வாராவிடினும் மேனிலை யறங்களையே மொழிபவர் வள்ளுவர் என்றும். பலர் போல் யானும் அழுந்தி மயங்கியிருந்த ஞான்று, முரண்கள் பல தோன்றக் கண்டேன். பல நிலையறம் கூறுவது திருக்குறள் எனவும், யார்க்கும் உலக வாழ்வு தரூஉம் செயலறம் நாட்டுபவர் வள்ளுவர் எனவும் அடிப்படையுண்மை தெளிந்த நாள் முதல், முரண்கள் என முன் தோன்றியவை மக்களினத்தின் அரண்களாக மெய்க்காட்சி தந்தன.

ஆசான் குற்றப்பட்டார் என்று முடித்தாற்றான், ஆராய்ச்சி நடுப்பட்டது என்பதாகச் சிலர் மனம் ஒப்பும். குறளும் முரணிற்று என்று கழறினாற்றான், துணிவுடை ஆய்வு என நம்முட் சிலர் பாராட்டப்புகுவர். என் நெஞ்சு அறியத் திருக்குறட்கண் முன்னுக்குப் பின் முரண்கள் காணின் வரைந்தவர் வள்ளுவர்