பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 265

தமிழ் நம்பி என்பதற்காக, மணமறி பொய்யை மெழுகிப் பேசேன்: கண்ட குற்றத்தை ஏதுவோடு புலப்படுத்துவேன். ஆயின், நெஞ்சு அறிந்த முரண்களோ இல. சில்லாண்டு திருக்குறள் படித்த நம்மனோர்க்கே, பார்த்தளவில் முரணெனத் தோற்றரவு செய்யும் குறள்கள். நினைமின், தம் நெடிய வாழ்நாளில் ஒரு தனிநூல் யாத்த வள்ளுவக் குரிசிற்கு அங்ஙன் தோன்றியிரா கொல்?

இப்பொழிவுக் குழுவில் ஆசிரியப் பெருமகன் வந்திருக்கப் பெறுவோமேல், என் செய்வார். அவையேறி உரையாற்றுவார்; மாறா உலகச் செயல் அடிப்படையை விரிப்பார்; நம் உள்ளும் அறிவும் ஒவ்வுமாறு காரணங் காட்டுவார்; முரண்கள் யாண்டுள என எதிர்வினாத் தொடுத்து, நம் மயக்கம் களைவார்மன். நிற்க. வெளிப்பட்ட சொல்லை ஆசிரியன்போற் கருதி, வினவி வினவித் தன் நினைவுக் கருவி கொண்டு அவன் நினைவுப் பொருளைக் கல்லி யெடுக்கவெண்டும் என்று முதற் பொழிவில் நோக்கு முறைபற்றி வழி கூறினேன். அக்கூற்றுப் பொருளை உள்ஸ்ரீத்திக் கொண்டு, உளவா முரண்கள்? என இனிச் சுருங்கக் காண்பாம்.

ஒரு வினைக்களத்து மேலாள் முதலாகப் பணியாளர் ஈறாகப் பலர் உளர். காலை வினைக்கு வரும் தொழிலாளிகளை வருக’ என மேலாள் நல்வரவு கூறுவதில்லை. போய் வருதும் என அன்னோரும் மாலையில் சொல்லிக்கொண்டு செல்வதில்லை. இஃது ஒரு நிலை. தன் மாளிகைக்குச் சிறு பணியாளன் வரின், வந்தவனை வருக என முகமன் கூறுகின்றான் மேலாள். போய் வருவன் எனப் பணியாளனும் சொல்லி மீள்கின்றான். இஃது ஒரு நிலை உலக நிகழ்ச்சியாகக் காணப்படும். இவ்விருநிலைகளும் தம்முள் முரண்கொலோ? மனைவி தனக்குத் தீது புரிவாளேல், கணவன் என்ற நிலையை நினைந்தும், மகன் தன் பணத்தைக் கள்ளுவானேல், தந்தை என்ற நிலையை நினைந்தும், உள்ளறிந்த குற்றத்தை ஊர் அறியப்படாது என்ற மானத்தால், ஒரு குடும்பத் தலைமகன் ஒறாது பொறுத்துக் கொள்கின்றான். குடி உறுப்பினர் தம் குற்றத்திற்காக வழக்குமன்று ஏறுவதில்லை. இஃது ஒரற நிலை. இத்தலைமகன் அறங்கூறு அவையத்து நடுவனாகத் தொழில் செய்பவன் என்று வைத்துக் கொள்மின். தன் மனைவி ஊராரைப்