பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 வள்ளுவம்

பெருமொழி தூற்றியதாக, தன் மகன் ஊரார் உடைமையைத் திருடிய தாகத் தன் முன் மெய்க் குற்றம் சாற்றப்படுவரேல், அவ்விடத்து மனைவி மகன் என அவர் உறவு பாராது. குடும்பத் தலைவன் எனத் தன்னுறவு கொள்ளாது, அவைநடுவனாகத் தன்னை உட்கொண்டு, ஒறுக்கின்றான்; சிறைத் தீர்ப்புக் கூறுகின்றான். இஃது ஒரறநிலை, ஒரேசார் மக்களிடத்து ஒருவனே மேற்கொள்ளும் இவ்விருவகை ஒழுக்கங்களும் தம்மிடை முரண்பட்டன கொல்?

வீட்டில் எழுந்து பணியும் தன் அறிவுடை மகன் நாட்டுத் தலைவனாய்ப் பேரவைக்கு வருங்கால், முன்னிருக்கும் அவன் பெற்றோர், அவையோர் ஒப்பத் தாமும் எழுந்து நின்று பணிவு குறிப்ப. “இளையர் இனமுறையர் என்று இகழார்: நின்ற ஒளியோடு ஒழுகப்படும் (598) என்பது குறள். ஒர் உறுப்பினன் தன் அறிவுக்கு முரண் எனத் தோன்றினும், கட்சிப் பொது நலத்தை நினைந்து, அத் தலைவன் சொற்படி மக்களவைக்கண் கை தூக்குகின்றான். ஒரு தீர்மானத்தை முதற்கண் எதிர்த்த சிறுபான்மைக் கட்சி, அது பெரும்பான்மைக் கட்சியால் நிறைவேற்றப்பட்ட பின்றை. அதனை ஒரு பெருங்கட்சித் தீர்மானமாக எண்ணாது, மக்கட் பேரவைத் தீர்மானமாகவே ஏற்றுக் கொள்கின்றது; படைத் தலைவன் போர்முறை பிடித்தமில்லாவிடினும், ஒரு மறவன் தன் அறிவை ஒர் புறம் வைத்து. நாட்டன்பு காரணமாய், தலைவன் கூற்றுக்குக் கீழ்ப்படிகின்றான். கல்லூரி விடுதிக்கண் வதியும் மாணாக்கர் வாய்விட்டு உரத்திப் படியாது. பக்கத்தவனுக்குத் தொந்தரை செய்யாது. விடுதிக் கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் பாடத்தை மனத்துள் நினைந்து படிப்ப. இவ்வெல்லாம் முரணிய வேண்டா நிகழ்ச்சி களோ? எண்ணுமின்!

மேற்காட்டியாங்கு வரும் அளவிறந்த ஞாலப் போக்குகளால் நாம் பகுத்தறிய வேண்டும் உலகவியல்பு யாது அகநிலை, புறநிலை என அறம் இருகூறு படும். இவ்விரு கூறும் ஒருவர்க்கே இடத்துக்குத் தக உரியன. தற்செம்மைக்கு அகவறமும், உலகச் செம்மைக்குப் புறவறமும் இன்றியமையாதன. புறவறம் பொது நலம் பயப்பது: பலதிறப்பட்ட மனப்பாங்கு சான்ற மக்களினத்துக்குக் கட்டுப்பாடு