பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் கருத்துரை 267

தருவது: உலக வொழுங்கிற்கு அச்சாவது: அகவறம் போல்போற்றத் தகுவது. 1. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி (அறம் - 324) 2. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர் (பொருள் - 550) 1. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து (அறம் - 155) 2. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து (பொருள்- 561) 1. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கனார் இல் (அறம் - 276) 2. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று (பொருள் - 586)

கொல்லாமையும் கொலையும், ஒறாமையும் ஒறுப்பும், நெஞ்சத் துறவும் வஞ்சத்துறவும் மொழிகின்ற இக் குறள்கள் பெருமுரண் உடையன என்றுதான் கற்ற முதற்கண் நமக்குப்படும்; எனினும், யான் முன் எண்பித்த உலகியல்புகளை மனத்திற்கொண்டு. நோக்குவார்க்கு, எண் ஒன்றிட்ட குறளெல்லாம் (324, 155, 276) அக நிலையறங்கள் எனவும், எண் இரண்டிட்ட குறளெல்லாம் (550, 561, 586) புறநிலையறங்கள் எனவும் தெளிவுபடும். கொலையிற் கொடியாரை ஒறுத்தல் என்றும், தலைச் செல்லா வண்ணத்தால்’ ஒத்தாங்கு ஒறுப்பது என்றும், துறந்தார் படிவத்தராகி இறந்து ஆராய்க என்றும் வெறுமனே கருத்து நடைமட்டும் செய்திருப்பரேல், முரணெனப் பழித்தற்கு ஒரிடம் வைத்தவராவர்மன். தந்நூலைக் கற்பவர்க்கு, இவ்விவை முரணாகத் தோன்றும் என்ற ஒட்டத்தை வள்ளுவர் அறிந்தவர் ஆகலான், வேந்து ஒறுத்தல்’ என்றும், ‘ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து என்றும், சோர்விலது ஒற்று’ என்றும் முரண் அறுக்கும் எழுவாய்ச் சொற்களைப் பெய்து வைத்தார்.