பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26, 8 வள்ளுவம்

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில் (549)

நாட்டுத் தலைவன் மனிதன், வேந்து என்ற நிலையிருமை கொண்டவன். இரு நிலையுடைய அவன் ஒருவனைக் கொல்லுகின் றான். குடிகளுக்குப் பெரு நலிவு செய்த ஏதுப்பற்றிக் கொலை சூழ்வானேல், அது பொதுநலம் பயக்கும் புறவறமாம்; வடுவாகாது வேந்தன் தனித் தொழிலாம். குடிபுறங் காத்தோம்பாது, தன் அரச பதவியைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஒருவனைத் தண்டிப் பானேல், அதுவேந்துத் தொழிலன்று: மகப் பழி என்பது இக்குறட்

குறிப்பு.

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து (680)

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் (1028)

என்று வரும் வினைசெயல் வகைக் குறளும், குடிசெயல் வகைக் குறளும், நாட்டுப் பொதுநலம் நோக்கி வேந்தன் தன்மானத்தையும், குடிப் பொதுநலம் நோக்கி ஓர் உறுப்பினன் தன்மானத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் எனப் புறநிலையறம் யாப்புறுத்துவன.

அறமாவது மனத்துக்கண் மாசிலன் ஆதல். காலந்தோறும்

உலகோரால் ஐயப்படா உரு எது, அதனை ஒற்றன் மேற்கொண்டு

உளவறிவான். அவன் பூண்ட துறவுக் கோலம் வெளிப்படினும், அந்நிலையை அறப்பிழையாகத் தூற்றாது, ஒற்றறமாக மதிப்பது இன்றுங் காணப்படும் மாறா உலகியல். தன்னாட்டு நலம்நோக்கிப் படைப்பெருக்கின் உண்மையளவைப் பிறர் மயங்கும்படி திரிபுபடக் கூறுவது இன்றும் நிலவிவரும் அரசியல். இங்கன் மாறு கோலம் பூண்ட ஒற்றனையும், உண்மை மயக்கும் அமைச்சனையும் நாட்டன் பினராகக் கொள்ளுதும் அன்றி, மன மாசுடையராகக் கொள்ளுதும் அல்லோம். இனைய நல்லுலகியலை உட்கொண்டன்றே, “புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் பொய்ம்மையும் வாய்மை இடத்த” (292) என்று அறப்புரட்சி மொழிந்தார். “மாண்பு இறந்த மானமும் ஏதம் இறைக்கு (432) என்று தன்மானச் செருக்கு ஒழித்தார்.