பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74 வள்ளுவம்

என்ற முதுகண்ணன் சாத்தனார் பாட்டு மேலை விரிவெல்லாம் அடக்கி நிற்றலைக் காண்க.

நீக்கமில் நண்பர்களே! அன்பர்கள் விடுத்த வினாக்கள் இன்னும் பலவுள. திருக்குறள் தமிழ்ப் பண்பு காட்டும் நூலா வள்ளுவர் வரலாறும் குலமும் சமயமும் காலமும் யா? இன்று காணும் குறள் வைப்பு முறை பொருந்துங்கொல் எல்லாப் பொருளும் இதன் பால் உள’ என்பது முகமன் அன்றோ? இற்றைத் தமிழர்க்குச் சிறப்பாக உரிய வள்ளுவம் என்னை ‘உலகத்தார் உண்டென்பது இல் என்பான் வையத்து அலகையா வைக்கப்படும் (850) என்பத னால், உலகோர் ஆய்வின்றிச் சொல்லும் எதனையும் அறிவுடை ஒருவன் மூடமாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆசான் நெஞ்சமா? இனைய விடுப்புக்கெல்லாம் விடையிறுக்கப்புகின், காலம் மிக நீண்டுவிடும் என்று அஞ்சுவல். சொற்பொழிவு துவங்கி ஒருமணிப் போது ஆகின்றது. இவ்வளவில் உரையை முடித்துக் கொள்வதுதான் என் உட்கிடை. எனினும் நூற்றுக்கு மேலாய அன்பர்கள் விடுத்த ஒரு பொதுவினா உண்டு. அதற்கு விடையிறாது செல்லல் அழகன்று என்ற கருத்தால், அவ்வொன்றுக்கு மாத்திரம் விளக்கஞ் செய்வல். சிறிது பொறுத்தருளுமின். அவ் வினா வருமாறு:

5. திருவள்ளுவர்தம் ஊழ்க் கொள்கை யாது?

மாசு கற்பியா மாந்தீர்! இவ்வினா மிக்க சிக்கலுடைத்து: எனினும், இந்நாட்டினன் அறிந்து கொள்ள வேண்டும் இன்றியமை யாமைத்து. வினை என்றால் தொழில் என்று பொருள் கொள்ளும் 4. எண்மையை அறவிடுத்து, ‘பாவம்’ என்ற கருத்துத் தடிக்கப்பெற்ற நமக்கு, ஆசான் தனியுள்ளம் விளங்காமை வியப்பன்று. 56 அறிவிற் பட்டதுதான் வள்ளுவர் அறிவு என, இல்லாப் பொருளைக் குறளுக்கு ஏற்றத் துணிந்து விட்டோமே யன்றி, நாம் ஒவ்வா விடினும், அப்பெருமகன் கொண்ட தனி நெறியைக் காணும் உண்மைத் துடிப்பு, ஐயகோ நமக்கு ஒளிந்தது காண். மறுமை, எழுபிறப்பு முதலியவை திருக்குறளகத்து வருவன என்பது கொண்டு, இயைபில்லாக் குறள்களையும் வலித்து இக்கருத்துரை செய்ப ஒருசாரார். இனிப் பிறிதொருசாரார் மறுமை முதலிய