பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வள்ளுவம்

கருத்தால், உய்த்துணர வைத்துப் பாடலை ஒரு நாடகம் போல் ஆசிரியன் நிறுத்தி விடுகிறான். இவன் மகனே’ என்ற தன் துணிபை இல்லம் ஏகும் அமையத்து, தோழி என விளித்துக் கூறுவானேன்? அவன் குடி கொண்ட தன் மனப் பாங்கினை, வாய்ப்பு வரின் தாய்க்குத் தோழி வெளிப்படுத்த வேண்டும் என்பதன்றோ தலைவி எண்ணம்

நண்பர்களே 26 அடிப்பாடல் முச்சொல்லின் சூழ் நிலையை வெளிப்படையாகவும், நெஞ்சக் கருத்தை உய்த்துணர்வாகவும் தந்து - நிற்கிறது. திருவள்ளுவரோ எனின், ஈரடி வெண்பா யாத்தவர். ஈரடி என்பதினும் எழுசீராதலின் ஒன்றே முக்காலடி என்பதே பொருந்தும். இச்சிறு பாவில் வைத்துச் சூழ்நிலையும் நெஞ்சப் பொலிவும் ஓரிடத்தேனும் காட்டவியலுமா? முன்னிருக்கும் ஒரன்பர் வினவுகிறார், எல்லாம் வெளிப்படுமாறு பலவடிப் பாடலாக வள்ளுவர் நூல் ஏன் செய்தாரிலர் என்று. நல்வினா: யாவரும் தெளியத்தகும் ஒரு வினா. வினவிய அன்பர்க்கு நம் நன்றி. கற்பவர் சிந்தனைக்கு இடம் வைத்தார் என்பது சுருங்கிய விடை. “சொல்லாற் பரந்த பாவால் என்பயன்” என மறித்து வினவுவர் மதுரைத் தமிழ் நாகனார். எல்லாம் ஆசிரியனே சொல்லிவிடுவதாயின் விளக்கம் நிரம்பப் பெறலாம். விளக்கம் வேண்டுமென்பதை மறுப்பவர் இலர். அதற்கும் ஒரெல்லையுண்டு. ‘சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்’ என்பது தமிழர் கண்ட நெறி. பொருளையே மறைக்கும் விளக்கம் எற்றுக்கு வினை செய்தற்கும் பொருள்களைக் காண்டற்கும் துணை தரும் விளக்கொளியே, நம் நாள்வாழ்க்கையில் விரும்பப் படுவது. கண்கூசும் திருவிழாப் பேரொளியாலும், விளம்பர நிறவொளியாலும் பயன் பெரிது உளதாமோ? பெருவிளக்கம் அறிவு முனையை ஒருவந்தம் மழுக்குவது. அறிவிற் பதிந்தாலும் நினைவை இயக்காது. கற்பார்க்கு நீடிய ஆர்வமும், உழைப் பின்பமும், அறிவொளியும், எண்ணத் திட்பமும் உண்டாகா. செயலெழுச்சி அறவே வருதலின்று.

மக்கள் நினைவு வளர்ச்சிக்கு ஏற்ற கருத்துணவை ஆசிரியன் படைத்தருளுவான். வளர்ச்சியையே தருதல் யார்க்கும் ஒல்லும்? பிறந்த குழந்தை வளர்ப்புக்கு உரிய உணவுப் பொருளையே தாய்