பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 வள்ளுவம்

என்பதனை, முதற்கண் குறிக்கொள்மின் ஊழ்க்குறள் பத்தகத்தும் இனைய கருத்துக்கு யாதோர் குறிப்புச் சொற்கூட இல்லை என்பதனை நினைவிற்கொண்டு. இனி அவ்வதிகாரத்துக்குச் செய்த உரைக்கண், முன்வினைக் குறிப்பு முதலியன யாதும் இன்மையும் காண்க.

ஊழ் என்னும் கிளவிக்கு முறை என்பது பொருள். அம் முறை யாவது உலக முறை அல்லது உலகச் சூழ்நிலை. ‘உலகத்தியற்கை (373) என்பது சான்று. ஊழ்முறை - என்ற பெயர் தனக்கு இருத்தலின், அஃது ஒர் ஒழுங்குக்கு உட்பட்டுத்தான் உருப்பெறு கின்றது; எனினும், அதனைக் கணிப்பது நமக்கு எளிதன்று. ஏன்? ஊழின் தோற்றத்துக்குக் காரண்ம் பலப்பல. இடத்தானும் காலத்தானும் அரசானும் சமூகத்தானும் சுற்றுப்புறமக்களானும் வரும் புறநிலைப் பாங்கனைத்தும், முடிவில் ஞாலத்தியற்கையாய் - ஊழாய் மாறி நிற்கும். காரணப் பன்மை சான்ற ஊழ் நுண்ணிய பல விரிவுகளாய்க் கிளைப்பது; தூய பேரறிவு இல்லா மக்கள் பலரின் கணிப்பிற்கு அப்பாற்பட்டது.

ஊழ் செய்யும் நல்ல தீய தாக்குக்கள் பற்பல; அவற்றுள் சிலவற்றை ஆசிரியர் காட்டுப; மேலும், ஊழ் என்பது புறவுலகச் சூழ்நிலையாதலின், அஃது ஒருவன் புற வாழ்க்கையைத் தான் விரைந்து பற்றும் என்ற காரணத்தால், ஊழதிகாரத்துப் பல்குறட்கண் செல்வம் பற்றியே சுட்டுப. போர்க்காலம் போலும் ஒரு சூழ்நிலையில், ஒருவன் கோடிப் பொருளைத் தொகுத்துக் கொள்கின்றான். அங்ஙன் தொக்க பொருளை அவன் துய்யாதவாறு, இந்தியப் பிரிவினை போலும் பிறிதொரு அரசுச் சூழ்நிலை அவனுக்கு இழவு செய்கின்றது (377). ஒரு சூழ்நிலைக்கண் வருந்தி அழைத்தாலும் வாராத பொருள்கள் மற்றொரு சூழ்நிலைக்கண் வந்து, வீசியெறியினும் போகாவாய்க் கிடக்கின்றன (376), குறித்த ஒர் சூழ்புறத்தின்கண் செல்வமோ, அறிவோ என ஒன்றுதான் ஒருவன் படைத்துக்கொள்ள வாய்க்கின்றது. ஆங்கண் அவனால் அவ்விரண்டினையும் ஒருங்கு பெறுமாறு இல்லை (374). ஒருவர்க்குப் பிறவற்றின்கண் நற்து.ழ் தீச்சூழiயவை, செல்வம் ஈட்டற்கண், தீயூழ் நல்லூழாக மாறி நிற்கவும் செய்யும் (375).