பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 வள்ளுவம்

தம் அறிவிற் பட்டனவற்றைப் பழி வருவதாயினும் ஏற்றுத் துடைக்க முனையும் உணர்வுடை மாந்தர் இன்றும் பலருளர்; என்றும் இருப்பர். எனினும், ஐயகோ! ஒன்று நினைமின்

சீர்திருத்தம் என நேற்றுப் பெயரியது இன்று ஊழாய் மாறுகின்றது. உண்ணுங்கால் உணவு எனப்பட்டது உட்புகுந்தபின் மலமாதல் போல, ஒருவன் முதற்கண் செய்யுங்கால் புதுவழி எனப்பட்டது செயற்பாட்டிற்குப் பின் பழந்தடமாய்க் கிடக்கின்றது. மணந்த ஆண் கணவனாகும் உண்மைபோல, செய்த திருத்தம் பின்னர் ஊழாய் உறவுபடுகின்றது. முயன்று வளர்த்த மரம் முடிவில் மண்ணாதல் போல. எனைப் பலசெய்தும் இழைத்த சீர்திருத்தமெல் லாம் முன்னைச் சூழ்நிலையொடு சூழ்நிலையாய்க் கலந்து விடுகின்றன. சீர்திருத்தப்பால் காலப்பிரையால் ஊழ்மோராகும் என்பது அழியா உலகியற்கை, இவ்வுலகில் யார் ஆற்றும் யாதனை யுங், காலச் சுழற்சியால் தன்னதாக்கிக் கொண்டு இயலும் முன்னோட் டம் உடையது ஊழ் என்னும் சூழ்நிலை. இவ்வுண்மையை நமக்கு உள்ஸ்ரீத்தும் பொருட்டு,

ஊழிற் பெருவலி யாவுள’ மற்றொன்று சூழினும் தான்முந் துறும் (380) என்று ஒர் ஊழ்க்குறள் யாத்தார்.

தனியாட்சி உடையது ஊழ் எனக் கூறவந்ததன்று திருக்குறள்: நுணுகிப் பரந்த அதன் பொதுப் பேரியல்பைச் சுட்ட வந்தது. சூழ்நிலையாம் ஊழுக்கு நம்மை அடிமைப்படுத்துவது வள்ளுவம் அன்று: “_66our முயற்சியானும், கலங்கா அறிவானும், நின் வாழ்வுக்கு அவ்வூழை வயப்படுத்திக்கொள்க’ என்பது வள்ளுவப் பறை. ஏனைய பிறப்பெல்லாம் ஒத்த சூழ்நிலையாயின் வளரும்: ஒவ்வாச் சூழ்நிலையாயின் அழியும். அவை ஊழரசனின் செங்கோன்மையொடு கொடுங்கோன்மைக்கும் வழிபட்டுக் கிடப்பன: மீறவல்ல தன்னுரிமையற்றன. மக்கட் பிறப்போ எனின். அக்கீழ் நிலைப்பட்டதன்று. நன்று தீது காணவல்ல பகுத்தறிவு உடையது. சூழ்நிலை ஒப்பின், பயன் நிரம்பக்கொள்ளும் ஆற்றலும், ஒவ்வாவிடின் ஒவ்வுமாறு: முயற்சி என்னும் புரட்சி செய்து ஊழை வணக்கும் அறிவுத் துணிவும், மக்கட் பிறப்பிற்கு உண்டு என்பது