பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 வள்ளுவம்

குடிமைக்கண், குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் (959) என்று வருவன பல. தன்னை ஏய்த்துக் கொள்ளா வாய்மைப் பேராளன் புறங்கூறான்; வையான்; பிறர் இழிபுகளைச் சொல்லி மகிழான்; கண்டவாறு உளறான். கள்ளான்; வெகுளான். புறங்கூறினும் களவாடினும் தலை குனிந்து நாளை ஒப்ப வேண்டும் என்று அஞ்சி, அறிவுடையனாய்க் குற்றம் புகுதாமற் காத்துக் கொள்வான். பிறர் வினாவிய காலை, ஆம்; செய்தேன்’ எனத் துணிந்து ஒப்ப வரும் பொய்யா வினைகளையே ஆற்றுவான் சிறுமையுள் நீங்கிய சொற்களையே உரைப்பான். அழுக்காறாமை முதலிய மன வறங்களும், மெய்யுணர்தல் முதலிய அறிவறங்களும், இனியவை கூறல் முதலிய பிற சொல்லறங்களும், உடலுக்கு அனைத்து உரமும் நல்கும் பால் போல, வாய்மையறம் ஒன்றினால் உளவாம் ஆதலின், ‘இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்ல பிற (300) எனவும், எல்லா அறமும் தரும் (296) எனவும் நிகரின்மை சுட்டினார். -

ஆசிரியப் பெருமகன் வெறுத்துக் கடிந்த குற்றங்களுள் தலையாயது வஞ்சகம். மாந்தர்பலர்க்கு அறிவும் வஞ்சனையும் உடன் வளரக் காண்கின்றோம். பல சூழ்ச்சிகள் புரிந்து தப்பித்துக் கொள்பவனையே அறிவுடையான் என்பது உலகப் பெரு வழக்கு. அறிவுக் கூர்மையால் தூய புதுநெறி கண்டு வாழ விழையாது, வஞ்சித்து வாழவே மனிதன் அவாவுகின்றான். பலர் நம்பிக்கைக்கு உரிய இடமெல்லாம் வஞ்சித்தற்கு உரிய இடங்களாய் விடுகின்றன. இஃதோர் மாறா உலகச் சூழல். தன்னல அறிவுக் கொடியர்கள் இப் பொதுவியற்கைமேல் வைத்து மக்களைச் சூதாடுகின்றார்கள். தெளிந்தார் இல் தீமை புரிந்து ஒழுகுவார் (143), மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்து ஒழுகும் மாந்தர் (278), தவமறைந்து அல்லவை செய்தல் (274), முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சர் (828) என்றவாறு, நம்பிக்கைக் கட்டடத்துள் தீய அகப்பாம்பு நுழைந்து குடிகொள்ளும் கரவுகளை யெல்லாம் வெளிப்படுத்தி யருளினார். . .

வஞ்சனைக்குத் தஞ்சமாகும் பிறவிடங்கள் உடனே மேற் கொள்ள வாரா. கொள்ளற்குச் சிறிது காலமும் முயற்சியும்