பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 O. வள்ளுவம்

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற - (3 oo)

என அதிகாரச் சொற்களால் அகப்புற அறம் விளம்பினார். “அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் (2.98), துாஉய்மை என்பது அவாவின்மை; மற்றது வாஅய்மை வேண்டவரும் (364) என்பன வாய்மையின் முதற் பயன்சுட்டும் குறள்கள். சொல்வான் ஒருவன் தன் உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் கேட்கும் உலகத்தார் பலர் உள்ளத்துள் எல்லாம் உளன் ஆவான் , (294) என்பது வள்ளுவப் புகழ்.

தன் பிறப்புக்கே வாய்த்த சொற்கருவியைத் தன் பிறப்புக்கே உரிய நினைவு காட்ட ஆளாது, தன் பிறப்புக்கே உரிய அறிவுத் துணை கொண்டு மனிதன் எண்ணத்தையும் மொழியையும் கண்டவாறு அலைக்கழிவு செய்கின்றான். உண்மை கூறுவதால் தனக்கு நன்மை வரும் எனத் தோன்றின், நெஞ்சினை மறிக்காது வாய்மை பேச அறிவு விரும்புகின்றது. வாய்மையால் தனக்குத் தீமை வருமெனக் கருதினும், பொய்மையால் நன்மை வருமெனத் தோன்றினும், உண்மை நெஞ்சினை இடைமறித்து, அறிவு பொய் பேசப் புறப்படுகின்றது. மக்கள் முழுக்க முழுக்கத் தன்னலத்தைப் பிறநலம் போலச் சொல்லும் அறிவுத் துறையில் வளர்ந்து விட்டனர்; ஆதலின், அன்னோர் மொழி வாய்மையா? பொய்மையா எனக் காண்டல் அரிதரிது. மனத்துக்கும் சொல்லுக்கும் இடைநின்று அறிவு வழக்கறிஞன் போலப் பலபொய் இழைக்கின்றது. இவ்வறிவுக் குறுக்கீட்டை ஆசான் விரும்பவில்லை. மனத்தொடு (அறிவொடு அன்று) வாய்மை மொழியின் (295), உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின் (196) என மனமொழி நேரடித் தொடர்பு வேண்டுவது வள்ளுவம். அறிவோடு பேசுங்கால் சொல் எனப்படுவது மனத்தோடு பேசுங்கால் வாய்மை எனப்படும். சொல் அறிவு வெளியீடு என்றும், வாய்மை நெஞ்சு வெளியீடு என்றும் வேற்றுமை காண்க. இதனால் அன்றோ, சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க (827), ‘மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்றன்று (825) என்றார்.