பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 29s

மெய்ம்மைச் செல்வர்களே! வள்ளுவர் கண்ட வாய்மை யிலக்கணம் இதுகாறும் செய்த விளக்கத்தால் முற்றுப்பெறவில்லை. இனி விளக்க எஞ்சிநிற்கும் சிறந்த பகுதி ஒன்று உண்டு. வாய்மைக் குறள் பத்துள் இது வரை எட்டுக் குறள்களே எடுத்தாளப்பட்டன. இனி ஆளவேண்டும் சிறந்த குறள்கள் இரண்டு உள. அவையாவன:

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை யிலாத சொலல் (291) - பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் (292)

இவற்றுள் பொதிந்து கிடக்கும் வள்ளுவ நெஞ்சங்கள் பல. ஒவ்வொன்றாகக் காண்போம்.

மக்கள் தம்முள் உறவுநிலை ஒரே அளவினதாக இல்லை. நட்பு எனினும் நொதுமல் எனினும் பகை எனினும் அவற்றுள் எண்ணிறந்த ஏற்றத் தாழ்வுகள் உள. இற்றை நட்பினர் நாளைப் பகையாகுவர். பகையினர் நாளை நட்பாகுவர். ஒருவன் தன் உறவு நிலைக்கு ஏற்பப் பழகுவாரிடம் நெஞ்சு திறந்து சொல்கின்றான். இருவர் கூடுங்கால், மூன்றாமவரைப் பற்றிக் குற்ற நற்றம் பேசுவதே பெரிய உலகியல்பாகக் காண்கின்றோம். நீவிர் இருவிரும் உரையாடிய கருத்து என்ன? அவன் என்னைப் பற்றி உன்பால் யாது கூறினான்? என்று மூன்றாமவன் வினவுவதும் நாள் வழக்காகக் காண்கின்றோம். இந்நிலையில் உரையாடலை எங்ஙன் வெளி யிடுவது? நம்பாற் கொண்ட நம்பிக்கை காரணமாக, ஒருவன் தனக்குப் பிடியாப் பிறனைப் பற்றி இழித்தும் வைதும் நம்மிடத்துப் பகர்கின்றான்; உணர்ச்சியால் உந்தப்பட்டுக் கண்டவாறு பெரு மொழி தூற்றுகின்றான். நம்பி ஒருவன் சொல்லி வைத்த மறை பொருள்களைப் பிறர் அறியச் செய்வது கயமை யாதல் போல, பழக்க வயத்தால் நம்மை நம்பி ஒருவன் பலவாறு கொட்டிய சொற் களை அப்படியே ஏனையோர்க்கு எடுத்துரைப்பதும் கயமையாகும்.

சொன்னதனைச் சொல்லியாங்கு மற்றோர்க்குச் சொல்லுதல் நிகழ்ந்தது கூறும் உண்மையாயினும், ஒரு சொல் காலம், இடம், ஆள் மாறும்போது பொருளால் பெரும்பாலும் திரிவுபடும். நிகழ்ந்தது என்ற ஒன்றை மட்டும் வாய்மையின் முடிந்த இலக்கணமாகக்