பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2, 6 வள்ளுவம்

வள்ளுவர் தனிப் பொது நெஞ்சம் யாது? செயல், செயல், செயல். சொல்வது செயலுக்கு வரவேண்டும்: செயலுக்கு வருமாறு சொல்லவேண்டும் என்னும் ஓர் அடிப்படைக் கருத்தினைத் தம் நெஞ்சில் நீள இருத்திக் கொண்டே குறள் எழுதியவர் வள்ளுவர். செயல் அடிப்படையை யாண்டும் மறவா உளத்தினர் அப்பெருமகன். ஆதலால் செயலே வள்ளுவம் எனச் செய்க. பொதுவாகக் கல்வித் தேர்வுகளின் வினாத்தாள்களை ஆராய்வோம். இத்தாள்கள் தேர்வுக்குச் செல்லும் இந்நாள் மாணாக்கர் கற்ற அறிவை யொட்டியோ, அன்னவர் எழுதும் ஆற்றலைப் பொறுத்தோ குறிக்கப் படுவனவல்ல. இவற்றைக் குறிப்பார் நோக்கம் வினாத் தாள்களைக் கண்ணுறும் பல்கலைக் கழகத்தார், கல்வியாளர், பிறநாட்டார் எல்லோரும் வகுப்புக்கு ஏற்ப (மாணாக்கர் தரத்துக்கு ஏற்ப அன்று) நன்கு வினவியுளர் என்று மதிக்குமாறு செய்வதேயாம். நோக்கம் உயர்வுதான். ஆயினும் அதன் விளைவென்ன? மாணாக்கர்க்கு அறிவிட்டும் ஆர்வம் இல்லை. செவ்விய செயல் இல்லை. குறிப்பவர் நோக்கத்திற்கும் விடையெழுதும் மாணவர் செயற்கும் ஏற்றத் தாழ்வு மரக்கிளை போல் அகலச் செய்வதால், கல்விச் செம்மை பெரிதும் குறைபடக் காண்கின்றோம். கல்விப் பேரால் கோடி கோடிப் பொருள் கடலிற் கொட்டியது போல் பயனறக் காண்கின்றோம். குழுக்கூடி, மதிப்பெண் கூட்டி, மாணாக்கரைத் தேர்வித்துப் பொய்மதிப்புக் காக்கக் காண்கின்றோம். ஆதலின், செயலுக்கு அணித்து வாரா உயர்ந்த நோக்கத்தாற் பயனென்? வயிற்றியல்பு அறியாமல் அரசினர் செய்யும் உணவுச் சட்டம் போல யாரொருவர் வாழ்விலும் கொள்ளவியலா இமயமலை யன்ன உயரிய அறங்களால் வரும் நலம் யாது?

மக்கள் தத்தம் நிலைக்கேற்ப, நாள்வாழ்க்கைக் கண்ணே நடை முறையிற் கடைப்பிடிக்க வேண்டும் என்றதோர் அடிப்படையில், வாழ்க்கை நூல் செய்தவர் வள்ளுவர். செயல் நினைவொடு பிறந்தது திருக்குறளாதலின், முரணிலா வரையறையைக் காண்கின்றோம். ஒட்டும் வாழ்வு நெறிகளைக் காண்கின்றோம், எல்லோரும் ஓர் நிலையினர் என்று வைத்துப் பொதுவறங்களைச் சொல்லியொழியாது, பல்வேறு வாழ்நிலை யுடையாரும் பற்றி