பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மை நெஞ்சம் 297

நிகழ்ந்தவற்றுள் தன் நெஞ்சு அறிந்ததும், பிறர்க்குத் தீமை அற்றதுமாய சொல் வாய்மையாம் என வரையறுத்த பொய்யில் புலவர், நூலோர் அதிரும்படி நிகழாத நற்பொய்யும் வாய்மைப் பாலது என்று உலகம் வாழப் புரட்சிப் புத்தறம் நாட்டுவர். திருக்குறளகத்துத் தனியறத்துக்கு முரண்போலத் தோன்றும் இடமெல்லாம், மக்கட் பொதுநலம் உட்கொண்டு எழுந்த” உலகவறங்கள் என்று முன்னைச் சொற்பொழிவில் எண்பித்தேன். அதனை ஈண்டு நினைவு கொள்க. தீமையிலாத சொலல் என வாய்மைக்குக் கீழெல்லைப் பயன் மொழியும் ஆசான், புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று வாய்மைப் போலிக்கு மேலெல்லைப் பயன் வேண்டுவதும் நினையத்தகும். பொய்யால் தனக்கு வரும் நன்மை குற்றப்பட்டது; ஆதலின், தன்னின் நீங்கிய உலகப் பிறநலமே புரைதீர்ந்த நன்மையாம் என்பது வெளிப்படை. வளர்ப்பு மகன் வயிற்று மகன் ஆய்விடான் என்பதுபோல, நன்மை தரும் பொய்யேயாயினும், வாய்மைப் பெயர் அதற்கு இல்லை என்று அறிவிப்பான் பொய்ம்மையும் வாய்மையிடத்த எனச் செயற்கை யுரிமை சுட்டினார். வாய்மையிடத்த’ என்ற அயன்மைச் சொற் குறிப்பால், இப்பொய்யும் மெய்யாக நீடித்திராது, உரிய பொய்யேயாய்ப் பின்னொரு ஞான்று விளங்கித் தோன்றும் என்பது கருத்தாயிற்று. மேலும் இடத்த என்ற பன்மை முடிபால், மாசற்ற பிற நலம் நோக்கிக் கொள்ளக் கிடக்கும் புறப்பொய்ம்மைகள் பலவுள என்பதும் குறிப்பாயிற்று. ‘கடிது ஒச்சி மெல்ல எறிக (562). கடாஅ உருவொடு கண் அஞ்சாது (585), துறந்தார் படிவத்த ராகி (587), தானை படைத்தகையால் பாடு பெறும் (768) என்பன திருக்குறள் காட்டும் தூய பொய்யிடங்கள். இப் பொதுநலப் பொய்ம்மை இன்றியமையாதது என்பது நடைமுறைக் கண்ணாளர்க்குப் புலனாகும்.

காந்திப் பெருமகனாரை மாலை ஐந்து மணிக்கு ஒருவன் சுட்டுக் கொன்றான். பிரிவினையால் இந்து முசுலீம் வெறி பெருகியிருந்த காலத்து இப் பெருநிகழ்ச்சி நடந்தது. கொன்றவன் மகமதியனோ என்று இந்துக்கள் சினந்தனர். நம்மவனோ என்று மகமதியர்கள் உயிர் கலங்கினர்; ஒடி மறைந்து கொண்டனர். இக்குழப்ப