பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 வள்ளுவம்

பொய்யாமை நன்று (323) என்பதன் கருத்து கொலைக்கு ஏதுவாகுமெனின், தன் நெஞ்சறிந்த வாய்மையையும் தூயது என்று நம்பற்க. கொல்லா அறத்துக்குச் சார்புடைய பொய்யாமையே காண், “யாம் மெய்யாக் கண்டவற்றுள் நல்லது என்றவாறாம். இவ்விளக்கத்தால், புரைதீர்ந்த நன்மை (292) என்றவிடத்து, அந்நன்மையாவது பிற வுயிர்க் கொலையின்மை என்பது சிறந்த குறிப்பாயிற்று. கொலை நேரும் எனின், நிகழ்ந்த வாய்மையையும் விட்டொழிக்க நிகழாப் பொய்மையையும் பற்றிக் கொள்க என்பது பொய்யா வள்ளுவம், நூலறம் கூறாது. வாழ்வறம் கூறுவது ஆசான் நெஞ்சம் என்பது இதனானும் வலியுறும். .

கொல்லாமை சால்பறமே யன்றிச் செயலறம் அன்று. நடவாதபடி நினையத் தகும் தலையறமே யன்றி, நாள் வாழ்க்கையில் வினைதோறும் யாரும் கடைப் பிடிக்கத்தக்கதாகும் நடப்பறம் அன்று. கொலைக் குற்றம் பெரிதேனும், அதனைச் செய்வார் விரல் எண்ணிக்கைக்கு அடங்கும் சிலரேயாவர். தன்னைப் பற்றிய உயிரச்சத்தால், எல்லா மக்கள்பாலும் கொல்லாவறம் இயல்பாக அமைந்து கிடப்பது. பொய்க் குற்றமோ எனின், குழவி முதல் கிழவர் வரை, ஒழுக்கமில்லா யார்பாலும், எத்துறைக்கண்ணும் பரந்து காணப்படுவது; மேலும் நினைப்பளவில் நிகழ்தற்கு இடமாவது. சிலரே செய்தலின், கொலையும் அடியும் களவும் மன்றேறும் குற்றங்களாக உள்ளன. பொய் எல்லார்தம்பாலும் காணப்படுதலின், பொய்யாளன் என்று வழக்காடுவார் இலர். ‘யான் கல்லாதவன் என இந்நாட்டில் சொல்ல நாணுவார் ஒருவர் உண்டோ கல்லாதார் தொகை நிரம்பி யிருப்பதே இந்நாணின்மைக்குக் காரணம். பெருவாரியான மக்கள் இழைக்கும் பொதுக் குற்றத்துக்குப் பழியும் இல்லை; நாணத் துடிப்பும் இல்லை. பொய்ம்மை இங்ஙன் ஐயகோ! உலக வழக்கு ஆயிற்று. -

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் - (923) என்றபடி உள்ளத்துக்கு உணர்ச்சிப்பதம் வேண்டுவது வள்ளுவம். நெருப்புச் சூட்டினைப் பொருட்படுத்தாச் சமையலாளி கைத்திறம் நிகர்ப்ப, பொய் சொல்லிச் சொல்லி நம் மெல்லிய நெஞ்சு காய்த்துக்