பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 Q 4 வள்ளுவம்

பயிலும் செயற்கோள் இல்லை. கோளற்ற, செயலற்ற முறையற்ற வாழ்க்கையாகத் தள்ளிக்கொண்டு, இறப்பு நோக்கிச் செல்இன் றோம். உரம் போடா நல்வித்து விளையாமை போல, திட்பம் இல்லா எண்ணம் செயலாதல் இன்று. நெஞ்சுரம் அற்ற மகன் நினையும் எண்ணம் பேடிகை வாள் ஒக்கும். திண்மை பெறா எண்ணாளன் வாழ்வு விரியாது சுருங்கும்; ஆதலின் வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் (661) என்பர். இத்திட்ப வள்ளுவத்தை நினைக. நினைக, என்று நும்மைப் பன்மாணும் இரப்பன்.

இனிய நண்பர்களே! வணக்கம். ஆறிரண்டு நாட்களாகப் பன்னிரண்டு வள்ளுவப் பொழிவுகளை மனம் திறந்து கேட்டீர்கள், செயலுக்கு வரும் அறங்கரைவது திருக்குறள் மக்கள் வாழ வழி வகுப்பது திருக்குறள் பலநிலை யறம் தழுவியது திருக்குறள்; எந்நிலைய மாந்தரையும் முன்னேற்றுவது திருக்குறள்: உலகு ஒட்டும் நெறி காட்டுவது திருக்குறள், ஒருவன் வாழ்க்கை அவனைப் பொறுத்தது என்ற உண்மை அறைவது திருக்குறள். இணைய வள்ளுவ அடிப்படைகளை யெல்லாம் அறிந்தீர்கள். மனத்துய்மை, அயரா முயற்சி, அறிவாட்சி, பொய்யா வாய்மை, எண்ணத்திண்மை, குறிக்கோள் வாழ்க்கை, இடையறா ஒழுக்கச் செயல் எனவாங்கு, பல்வேறு வள்ளுவங்களைத் தெளிந்தீர்கள். இனி, கற்றபின் நிற்க (391) என்ற உலகத் தமிழாசான் நெஞ்சம் நம் நெஞ்சம் ஆகுக. “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் (358) என்ற மக்கட் பெருமகனார் நெஞ்சம் நம் நெஞ்சம் ஆகுக. ‘துளங்காது தூக்கங் கடிந்து செயல் (368) என்ற திருவள்ளுவர் நெஞ்சம் நம் நெஞ்சம் ஆகுக.

  • - *