பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 27

யொழுகுமாறு தனியறங்கள் அஃதாவது நிலைக்கேற்ற பல்லறங்கள் கரையும் மாட்சியைக் காண்கின்றோம். வாழ்வாங்கு வாழ்தல் வேண்டும் என்னும் துணிவிற்று திருக்குறளாதலின், அறத்துப் பால் பொருட்பால்களோடு, காமத்துப் பாலையும் கூட்டியுரைக்கக் காண்கின்றோம். இவ்வுலகில் வாழ நூல் செய்தார் வள்ளுவ ராதலின், திருக்குறளகத்து, மக்கட்பேறும் விருந்தோம்பலும் சுற்றந்தழாலும் ஈகையும் நல்குரவும் இரவும் மருந்தும் என்றாங்கு, உலகியல் அதிகாரங்களைக் காண்கின்றோம். அப்பொழுதைய உலக நிலையொட்டி ஒழுகவல்லாதார் பலபடக் கற்றவராக இருப்பினும், அறிவிலாதவரே என்று துணிந்து அறையுமேல், திருக்குறளை வாழ்க்கை நூல், செயல் நூல், உலக நூல் என்றழைப் பதுவே பொருத்தம் காணtர். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (140). ‘உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426), ‘உலகத்து இயற்கை அறிந்து செயல் (637), வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் (50) என உலகவறம் வலியுறுத்திய தமிழ்ப் பேராசானை, உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன் எனக் கல்லாடம் விதந்தோது வது ஒன்றா யுலகத்துப் பொன்றாது நிற்கும் உயர்ந்த புகழன்றோ!

- நாம் வாழும் உலகம் பொருளுலகம் என்ப. காப்பு அணிந்த பொற்கையும், தோடு தொங்கும் வயிரச் செவியும், மோதிரம் இட்ட பச்சை விரலும் உடைய ஒரன்பர் மனத்துக்கண் அவா வற்றவராய் இருப்பினும் அவரைத் துறவோராக மதிக்க உலகம் பிற்படும். துறவு என்பது உலகக் கண்ணாளர்க்குப் பொருட்டுறவையே குறிக்கும். “இயல்பாகும் நோன்பிற்கு ஒன்றின்மை (344) என்பது குறள். ஆதலின் அடியவர்களை ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்’ என்றும், வீடும் ஒரு பெருஞ் செல்வமாகப் புனையப் படுதல் நோக்கி, வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்றும் சேக்கிழார் வரையறுப்பர். செல்வமே உரைகல்லாக மக்களை மக்கள் அளப்பது உலகக் காட்சி. இந்நிலையில் பொருளை ஒரு பொருட் படுத்திச் சொல்லா நூல் உலகிற்கு ஒட்டுங்கொல் மக்களை யெல்லாம் தம் குறள் கற்பான் ஈர்க்கும் இவ்வுலக நிலையை, பொருள் மனப்பாங்கினை உண்ர்ந்தவர் வள்ளுவர். விதிவிளக்கு ஆயிரமும் ஒளிர ஒரழுத்தம் போதுமாப் போலே, மாந்தரனைவோரும்