பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 0. வள்ளுவம்

நினைந்து செயல் தோய ஆயிரத்தெழுபது குறள்கள் வரைந்தேன். இவ்வனைத்தையும் கற்றபின்னும், அக்கற்றான் வாழ்வில் யாதொரு பண்புத் திருத்தமும் கண்டிலேன். “பல நல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது” (823) என்னும் வேண்டாக் கருத்திற்கு விழைந்த இலக்கியமாயினன். எங்ஙன் எங்ஙன் ஒழுகத்தகும் என்று அறங்கூறும் என் குறள்களைக் கசடறக் கற்று, யாது பற்றிக் கொண்டான், அங்ஙன் அங்ஙன் ஒழுகப்படாது என்று எடுத்துக் கொண்டனன். இவன் மகனல்லன்; விலங்கல்லன்: மரமுமல்லன் கயமை என்னும் புத்தம்புதிய பிறப்பினன். இப் பிறப்புக்கெனத் தனியுடம்பு இல்லை. பிறரை வஞ்சிக்கும் கோள் கொண்டு பிறக்கும்போதே, மக்களுடம்பு போர்த்து வந்த போலியன்” எனவாங்கு வள்ளுவர் உரையாற்றுங் காலை அவர் நெஞ்சு கொதிக்கக் காண்போம். சொல் துடிக்கக் காண்போம். அப்போது நமக்குச் சிரிப்பா தோன்றும் ஒர்மின்

நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்னென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் (1 1 04)

முதலின்பம் துய்த்த தலைவன் தன்னுட் சொல்லிக் கொள்வது இது. ‘நெருங்கினாற் சுடும்; நீங்கினால் யாதும் செய்யாது. இது யாருங் காணும் புறத்தியின் இயல்பு. யான் கண்ட இவள் காமத்தியோ நெருங்குதொறும் குளிரும்; நீங்குதொறும் சுடும். இப்புதிய அகத்தி இவளொருத்திக்கு மட்டும் யாண்டுப் பிறந்தது எனத் தலைவன் வியக்கின்றான். தலைவன் உரைகேட்டு நாம் நகைத்தால், நம் நகை கண்டு அவனுக்கும் நகைப்பு வரும். தலைவியே குலுங்க நகுவாள். யாரும் நகுதற்குரிய இக்குறள்கள் போல்வனவல்ல, கயமைத் தலைப்புக் குறள்கள். அவை நாணற்குரியன.

அறம் பொருட் பால்களின் எல்லை யதிகாரமாகிய கயமைத் தலைப்பு ஆசிரியர் மனக்கொதிப்பு எல்லைக்கோர் அறிகுறி. கற்பதும் அறிவதுமெல்லாம் வாழ்வில் நடப்பதற்கு என்பது அப்பெருமகன் துணிவு. செல்வப் பயன் பிறர்க்கு வழங்குவது; உண்டு உடுத்துத் துய்ப்பது. உடையான் தன் வாழ்நாளில் கொடாது நுகராது கழியினும், அவனுடைமைக்கு அழிவு இல்லை. அவனுக்குப் பின்றை அச்செல்வம் பயன்படும். ஏனெனின் செல்வம் உடையானோடு