பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 31

மாய்வதில்லை. கல்வியறிவுகளோ எனின், உடையான் ஒழியுங்கால் தாமும் ஒழிந்து போவன. கற்ற அறிவுடையான் தன்னுடைமைகளை வாழுங்காலத்தே பயன்படுத்தியாக வேண்டும். இது பொருளுடை மைக்கும் கல்வியறிவுடைமைக்கும் உள்ள ஒரு பெரும் வேறுபாடு. வேறு வகையாகச் சொல்லின், மனிதனின் புறவுடைமைக்கும் அகவுடைமைக்கும் இடைப்பட்ட வேற்றுமை என்க. இதனால் நாம் அறியக்கிடப்பது பிறிதொன்றும் உண்டு. செல்வத்தையுடையான் துய்த்தலினும் கொடுத்தல் சிறந்தது. கல்வியறிவுடையான் உரைத்தலினும் ஒழுகல் சிறந்தது. “சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணஞ் செயல்” (6.64) என்பது செயல் வேண்டும் திருக்குறள். பிறிதொரு வகையாக நினையின். செல்வ முடையார்க்கு மதிப்பு வழங்க வழங்க வரும். கற்ற அறிஞர்க்கு மதிப்பு அக்கல்வியறிவுகளைத் தம் வாழ்விற் கொள்ளக் கொள்ள வரும்.

என் வன்புறை யெல்லாம் என்ன? வாழநூல் செய்தார் வள்ளுவர். வாழ்வோ யார்க்கும் செயலின்றி யமையாது. ‘அறிவுடை யார் எல்லாம் உடையார் (430) என்று அறுதியிடும் திருவள்ளுவரே, ‘அரம் போலுங் கூர்மையரேனும் மரம்போல்வர் (997), அஃகி அகன்ற அறிவு என்னாம் (175), ‘அறிவினான் ஆகுவது உண்டோ (315) என்றவாறு நாணிட்டு அந்தரத்துத் தொங்கும்படி அறிவுச்செருக்குப் படிந்தாரை ஏதும் வைத்துப் பாராது இகழ்வரேல், ஒழுக்கச் செயலற்ற அறிவின் இழிவும், அறிவுடைச் செயலின் உயர்வும் நன்கு புலனாகும். ஒதுவது, உணர்வது, பிறர்க்கு உரைப்பது மெல்லாம் தன்னடக்கத்துக்குத் துணையாதல் வேண்டும். இம்மூன்றும் பெறாநிலையில் அடங்காதானை, பாவம், பேதை எனச் சொல்லி வாளாவிட்டுவிடுகிறார்! கல்வி, உணர்வு,சொல்வன்மை யெல்லாம் நன்னர் வாய்க்கப்பெற்றும் அடக்கமிலானை, கேண்மின், பேதையிற் பேதை’ என்று சுடச்சுட விரிக்கிறார். கல்லாப் பேதைக்கு, கற்றால் திருந்தும் வாய்ப்பு உண்டு. கற்றறி பேதையோ யார் சொல்லினும் அவரைப் பேதையாக மயங்கி இறுமாந்து தன் மடமையைப் பெருக்கிக் கொள்வன். பேதைமை யழிதற்குத் துணை செய்வனவற்றை, இம் மடவோன் அதன் ஆக்கத்திற்குத் துணைக் கொள்வன். ஆதலால் பெற்றிருந்தும் பேதைப் பட்டானை