பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வள்ளுவம்

ஓரினத்துக்கே தலைமை கொடுப்பதுபோல, பேதையிற் பேதை என்ற சொன்னடையில் வைத்து,

ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையிற் பேதையார் இல் (834) எனப் பழிப்பர்.

மரம் பழுத்தற்கன்றோ தோட்டக்காரன் உழைக்கிறான். அவன் பாட்டையெல்லாம் ஏற்ற மரத்தின் காய் வெம்பி விழுந்தால், நன்று. மரம் விறகாயிற்று என்று உவப்பானோ? நினைந்தபயன் வாராமையின், எத்துணைக் கவலுறுவன் பேராசிரியர் தம் பெருமைக்கோ கருத்துக்களை வெளியிடுப. இல்லை; இல்லை. செய்கைக்கு அன்றோ! அக்கருத்துக்களைக் கற்றார் தம் வாழ்விற் செயற்படுத்தாது வாயளவிற் சொற்படுத்தினால், அப்பெருமக்கள் வெறாரோ? பொருளாக்குவார்க்கும் துய்ப்பார்க்கும் இடைநின்று சரக்குப் பரப்பும் தரகர் போலக் கல்வியாளர் இடைநிற்ப, அவர் என்செய்வார்? பேராசிரியர் எழுத்தினை ஊரார்க்குப் பரப்புவார். தரகர் கழிவூதியம் பெறுவதொப்பக் கற்றார் என்னும் மதிப்பு ஈட்ட விழைப. அறிவுலகில் இத்தரகு முறையை வாழ்நூல் ஆசிரியர் பொறுப்பதில்லை. தங்கருத்துப் பரப்பாளர்களை வேண்டார். கற்றபடி நிற்கும் செயலாளரையே மதிப்ப. கற்றான் தன் வாய்வழிப் பறை சாற்றுவதிலும், செய்தான் தன் பயன் வழிப் பரப்புவதையே ஏற்ப, - -

வள்ளுவர் தனிப் பொதுநெஞ்சம் செயல், செயல்: செயலேயாகும். இச்செயல் வள்ளுவத்தை மாங்குடி மருதனார் மறந்து, ஒதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி என்ற பாராட்டள வோடு அமைந்தார். செயற்கு உரியது என்றும், யார்க்கும் எளியது என்றும் முடித்தாரிலர். சிறுகருந்தும்பியார் ‘உள்ளுதல்; உள்ளியுரைத்தல்; உரைத்ததனைத் தெள்ளுதலன்றே செயல்பால எனத் தெளிதல் அளவோடு நின்றுவிடக் காண்கின்றோம். இவ்வளவுப் பாராட்டுரை, ஓதி யுணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தானடங்காவிடில் பேதை என்ற குறளின் இடிப்புரைக்குப் பொருந்துமா? உரைத்துத் தெளிதலோடு, ஒழுகுதலன்றோ செயற் பாலது என்று தும்பியார் முடித்திருந்தால், வள்ளுவர் உள்ளங்