பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 37

யெல்லாம் உலகச் சூழ்நிலை காரணமாய்ப் பயன் படாதொழிகையும், முயற்சியால் கோடி தொகுத்தார்க்கும் அரசியல் காரணமாய்த் துய்க்கக் கொடுத்து வையாமையும், யாங்ஙனம் ஒழுகினும் பொருட் கேடும் பெருக்கமும் உலகியலாதலும், யாபிற இருப்பினும் பொருளிலார்க்கு இவ்வுலகம் இன்மையும், நிலையாச் செல்வம் நிலையிற்று என்னும் மக்கள் மயக்கமும், சிலர் அறவே ஈயாமையும், துய்யாமையும், சிலர் முற்றும் தாமே துய்த்தலும், சிலர் அனைத்தும் பிறர்க்கே வழங்கலும் எனவாங்கு, வள்ளுவப் பேராசிரியர் பொருள் பற்றி மக்கள்பாற் கண்ட நிலைகள் பலப்பல.

‘நுழை புலம் இல்லான் எழில் நலம் (407) என அழகுப் பேதையும், கல்லார்கட் பட்ட திரு (408) எனச் செல்வப் பேதையும், மேற் பிறந்தாராயினும் கல்லாதார் (409) எனக் குடிப்பேதையும் கல்லாதான் சொற் காமுறுதல் (402) என வாய்ப்பேதையும் வள்ளுவர் கண்ட ஞாலப் பேதைகள். இந்நிலையினர்களைக் கண்ட அப்பேராசான், “இணர் ஊழ்த்தும் நாறா மலரனையர் (650) எனப் பயனில் புலவரையும், அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் (720) என அவையறியாப் புலவரையும், கற்றறிந்தும் நல்லாரவை அஞ்சுவார் (729) என அச்சப் புலவரையும், பல நல்ல கற்றக்கடைத்தும் (823) என மாணாப் புலவரையும், கல்லாத மேற்கொண்டொழுகல் (845) எனப் பிற துறை விரிக்கும் சிறிய புலவரையும் கண்டவர். செல்வர் முன் வறியர்போல ஏக்கற்றுக் கற்பாரும். அங்ஙன் கற்க நாணிக் கல்லாதொழிவாரும், கல்வியே கண்ணெனப் பெற்றாரும், கண்ணெனப் பெயரிய புண் ணுடையாரும், செவிக்குணவாகிய கேள்வி இல்லாதபோது பசியாற்றிக் கொள்ளும் செல்வ மக்களும், செவிச்சுவை சிறிதும் அறியாச் சோற்று மாக்களும் வள்ளுவக் காட்சிகள். அறிவுத் தொழுகை செய்வாரும், மக்கள் மனமுவப்பக் கலந்து பழகுவோரும், அவையோர் வேட்ப விரித்துரைப்பாரும், அவையஞ்சா மாற்றம் விடுக்கும் நோக்கோடு நிரம்பிய நூல் பயில்வாரும், பிறரின்பங்கண்டு கல்வியை மேன்மேலும் விழைவாரும், கடசறக் கற்றுக் கற்றபடி நிற்பாரும் எனவாங்கு குறள் முதல்வன் கல்வி பற்றி மக்கள்பாற் கண்ட நிலைகள் பலப்பல.