பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 41

திருக்குறள் என்பதனை ஐயுறுவாரும் உண்டுகெர்ல் மறுப்பாரும் ஐயுறுவாரும் இலராகப் பெருமை தழைத்தோங்கிப் பரவுவது உலகத் தமிழ்மறை காண்.

இப்பொதுப் புகழ் நிற்க, ஒரு பெருவினா. சாதி மத நாட்டுப் பொதுமை வள்ளுவர் நெஞ்சமா? இப் பொதுமையெண்ண வுருவின்மேல் திருக்குறள் எழுந்ததா? பொதுமை பரப்பும் கோளொடு, ஆசான் அறம் வகுத்தனரா? பொதுமை நிலைக்களம் எண்ணித் திருக்குறள் கற்க வேண்டுமா? நன்கு ஒர்மின் மயங்கன்மின் சாதிப்பற்றும் சமயப்பற்றும் தம் எல்லை கடந்து, அறிவின்றிக் கடவுளன்பின்றி, பிற சாதி சமயங்கட்கு அல்லன. பெருக்கித் தலை விரித்தாடிய ஆகாப்பூசல் நாள் தொடங்கி, நாம் கொண்ட புதுக்குரலே பொதுமையன்றி, வள்ளுவனார் எழுத்துக்குப் பொதுமை நிலைக்களம் அன்று. மடியன் பழம் பெருமை பேசுமாப் போல தமிழன் உயர்ந்தவன்; பொதுமை சாற்றும் வள்ளுவரைக் காண்க: தமிழ் சிறந்தது: பொதுவறங் கூறும் திருக்குறளைக் காண்க என்று, தமிழினமும், தமிழும் உட்பகையால், புறப்பகையால், காணும் உலகை வெறுத்த அழிவுக் கொள்கையால், பலபட வாழ்விழந்த காலத்து நாம் பற்றிய எழுச்சிக்குரலே யன்றி, திருக்குறட் பிறப்பிற்குப் பொதுமை நிலைக்களமன்று.

சாதி சமயக் கிழட்டுப் பூசல்கள் வலிவிழந்து நிற்ப, கட்சிப் பூசலும் கொள்கைப் பூசலும் நிறவெறியுங் இனவெறியும் போர்ச் சூழலும் அரசுப்பகையும், அறிவுப்போர்வை பூண்டு அறிஞர்கள் முத்திரை தாங்கிப் பரவி வரும் இவ்விருபதாம் நூற்றாண்டில், வாழும் பேறுடைய நாம் திருக்குறட் பொதுமையை முன்னைவிட முரசறையத் தொடங்கியிருக்கிறோம். எம்மாட்டும் பொதுமை அறையும் அரிய நூலொன்று உண்டு காண் என்று திருக்குறள் கல்லாத் தமிழரும், அவையேறிச் சொல்லுமாறு பொதுப்பறை முழக்கி வருகிறோம். பொய்யில் புலவருக்கு நாம் காட்டற்குரிய நன்றி வேறென்கொல் ஒழிவில் பொதுப்பறையால் வள்ளுவர் புகழை ஞாலங்கான இமயமலை மேலிட்ட ஞாயிறு ஆக்கினோம் என்று இற்றைத் தமிழ ரனைவரும் செம்மாப்படையலாம். அதனை யான் ஒவ்வேன்: ஒவ்வேன். வள்ளுவர் நெஞ்சம் கேட்கும் நீவிரும்