பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வள்ளுவம்

ஒவ்வீர்; ஒவ்வீர். மக்கள் ஒவ்வொருத்தரும் உய்வான், நிலைத் தனிமை கண்டு அறத்தனிமை வரைந்த தனிமறை எழுதிய வள்ளுவர் புகழ் நம் பொதுமைக் கூக்குரலால் கடலடிக் கீழ் விளக்காயிற்றன்றோ!

சாதி, மதம், நாடு முதலாய பொதுமை திருக்குறள் அறப்பிறப் பிற்கு நிலைக்களம் அன்று என்றேன். இப்பொதுமையை வள்ளுவர் பற்றினார் அல்லர் என்றேன். ஏன்? மக்கள் நடப்பை ஆய்ந்தாய்ந்து தெளிந்த குரிசில் இவ்வாசான். நாமும் சிறுபொழுது அந்நடப்பை முன்னிறுத்திக் காண்போம். மக்கள் பல்வேறு சாதியராக, இனத்தவ ராக, மதத்தவராக, நாட்டவராக, மொழியவராக, பிறகிளையவராக, ஞாலத்திடைப் பிரிவுண்டு சேய்மைக் காலந்தொட்டுக்கிடக்கின்றனர். கட்சி, பதவி, கொள்கை என்றினைய புதிய பிரிவினராகவும் கிளைத்துக்கொண்டு வருகின்றனர். போர் தொடுக்கும் இரு நாட்டாரிடை உலகப்பொதுமை, ஒருநாட்டு இரு குழுவினரிடை நாட்டுப் பொதுமை, இரு சமயத்தாரிடை கடவுட் பொதுமை, இரு சாதியாரிடை சாதிப் பொதுமை பேசுகின்றோம். இப் பொதுமை யறம் சாற்றுவார் ஆழ்ந்து நினைய வேண்டியதொன்று உண்டு. ஒரு சாதியாருக்குள் பூசலில்லையா? ஒரு மதத்தாருள் பூசல் இன்றா? இன்று வளர்ந்துவரும் அரசியற்கண் ஒரு கட்சியுள் பெரும் பிணக்கு இல்லைகொல் ஒரே சாதி ஒரே மதம் ஒரே கட்சி எனப் பொதுப்பட்டிருந்தும், ஏன் மலைத்துக் கொள்ப சாதி சமயம் மொழி கட்சி நாடு என்று எனை வகையானும் வேற்றுமையில்லா ஓரின மக்களுள், போரனைய பூசல் நிகழக் காணுதுமே, எதனால்?

‘இரும்பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன்;

கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்;

நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே:

நின்னொடு,

பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே:

ஒருவீர் தோற்பினும் தோற்பதுங் குடியே:

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே:

அதனால்,

குடிப்பொருள் அன்று நுஞ்செய்தி