பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 43

என்று கோஆர்கிழார் அறிவறையுமாறு, ஒருகுடிப்பிறந்த நலங்கிள்ளி நெடுங்கிள்ளி தம்முள் போர் தொடுத்துக் கொள்வானேன்? பொதுமைக் குறைவு ஏதும் உண்டா? எனைத்து வகையானும் ஒற்றுமை சான்ற ஒருதாய் வயிற்று மக்களுள்ளும், ஈருடல் ஒருயிரெனக் காதலன்பிற் கட்டுண்ட கணவன் மனைவியருள்ளும், கோப்பெருஞ்சோழனும் மக்களும் போலப் பெற்றோர் பிள்ளைக ளுள்ளும், மாமி மருமகள் நாத்துானாருள்ளும் நாள்தொறும் விடிந்தது முதல் தொழில்போலக் காணும் பூசல் முழக்கங்கள். ஐயகோ, கொஞ்ச நஞ்சமா? ஆண்டு நாம் பரப்பும் பொதுமைக்குக் குறைவு உண்டோ? தமப்பனார் Ggrorq கிணற்றில், நீர் வேற்றுமையில்லாக் கிணற்றில் மக்கள் ஐவர்தம் இறைகயிற்று வேற்றுமையன்றோ நம் கண்ணுறுத்தும் இன்னாக் காட்சி.

பிறிதொருவாறாகவும் ஆய்மின். இருவேறு குலத்தாரிடை வியத்தகு ஒற்றுமை யில்லையா? கொள்வனை கொடுப்பனை இல்லையா? இரு வேறு சாதியாரிடைக் கூட்டுப் பெரு வாணிகம் இல்லையா? இரு வேறு சமயத்தாரிடை உயிர் காக்கும் பெருநட்பு இன்றா? ஒரு மதத்து அரசு தன் நாடே போர்க்களமாக, தன்னாட்டு மற்றை மதக்குடியின ரெல்லாம் பகைவராகத் துணிந்து, பனங்குலைபோல் வெட்டிச் சாய்த்தபோது, அரசு மதத்துச் சிலர் கண்ணோடி அடைக்கலங் கொடுத்த அன்புச் செயல்கள் வரலாற்றில் உளவலவோ?

“மொழிபல பெருகிய பழிதீர் தேளத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ என்று உருத்திரங்கண்ணனார் காட்டிய நாகரிகப்படி, பன்மொழி மக்களிடை நாம் கலந்து உறையும் வாழ்க்கையுடையம் அல்லமோ? பல்வகையான வேற்றுமை சான்ற இந்தியர், அயல் நாட்டிடை வாழுங்காறும், ஊர்ப்பூசல் மறந்து ஓரினமாய் வாழ்கின்றனர் அல்லரோ? ஈண்டெல்லாம் வேற்றுமை நிரம்பியும் ஒற்றுமை திகழ்வானேன்? ஒர்மின்!

ஒரே குடி, ஒரே சாதி, ஒரே நெறி, ஒரே மொழி, ஒரே நாடு எனவாங்குப் பொதுப்பட்டாருள்ளும் கொலையனைய பெரும் பூசல்