பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 7

குறைப்பான், வள்ளுவர் கண்ட நெறி உளப்பூசல் தணிக்கும் அகத்துாய்மை எனத் துணிக.

வள்ளுவர் செயல் நெஞ்சத்தைப் பொச்சாந்த நாம் அப் பெருமகன் தெளித்த தூய தனி நெறியையும் பொச்சாந்தோம். உலகத்து எம்மகனும் எம்மகளும் தன் மனம் தூயதாய் வாழ எழுதப்பட்டது குறள் என்பதை நினைந்தோமில்லை. மக்கள் தனி வாழ்வுக் கல்லறை மேல் பொதுக்கோபுரம் எழுவான் பாடுபடு கிறோம். r. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)

என்னும் மருத்துவ முறையைப் பற்றாது, தனி உள்வேக்காட்டினைப் பாராது. தெருமருத்துவன் போலப் பொதுமை மருந்து சாற்றிக் கழிப்பதாலன்றோ, நாடுதொறும் அரசுதொறும் குழப்பம். ஊர்தொறும் குடிதொறும் குழப்பம், உள்ளந்தொறும் குழப்பம் என ஞாலமுழுதும் ஒரே குழப்பக் கொந்தளிப்பு பரவி நிற்கிறது. நாடுகள் தம்முள் அச்சப்பகை நீங்கி, காப்புச் செலவை யெல்லாம் மக்கள் பசி பிணி நீக்கவும், அறியாமை அகற்றவும், மாசொழிக்கவும் புதுவழிப்படுத்துமேல், இவ்வுலகம் என்றும் கானா நிலையுலகமாம் அன்றோ! மக்கள் நலியப் போர்ச்செலவு பெருக்கும் பொதுமைக் T6 யார்க்குப் பயன்?

மனிதன் தன் உள்ளப் பூசலைப் பலவாயில்களில் வெளிப்படுத்துகிறான். அறியாப் பேதையுலகம் மூலங் காணாது சாதிப்பூசல், சமயப்பூசல், நாட்டுப்பூசல், கொள்கைப்பூசலென வழிப்பேரிட்டு மயங்குகின்றது. முதற்கண் ஒரிடத்து நீர்த்துாய்மை செய்ய நினையாது. நீரோடும் பல்குழாய்தோறும் அத்துாய்மை செய்ய அரும்பாடுபடுகின்றது. அகத்துாய்மை தத்தம் வாய்மையாற் காணப் படும் என்று துணியாது, பொதுமைப் பேச்சாற் காணப்படும் என்று நம்புகின்றது. எக்காலத்து எவ்வாயில் புகழப்படுகின்றதோ அவ்வாயில் வஞ்சகர் பலர்க்கு ஒளிவிடமாகிறது என்பது வரலாற்றுக் காட்சி. ஆதலின் வாயிற் பொதுமை பரப்புவதினும், அவ்வாயில் வழி வருஉம் எண்ணத்துாய்மை பரப்புக. எண்ணம் பிறக்கும் நெஞ்சத் தூய்மை வலியுறுத்துக. தூய்மையே வள்ளுவம் எனத் துணிக