பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வள்ளுவம்

விழுச் செல்வம் (363), ‘உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை’ (261), தன்நெஞ் சறிவது பொய்யற்க (293), “ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும் (131) எனவரூஉம் நிரம்பிய பல்கருத்துக்களால் நாம் அறியக்கிடப்பது என்? இமயமலை மேல் நிற்கும் ஞாயிறு போல உயர்ந்து ஒளிறும் வாழ்க்கைநிலை யுடையார்க்கும் நிலை தாழாது உயர்த்தும் அறிவுச்சுவடி திருக்குறளல்லது பிறிதில்லை காண்.

தந்தையின் ஒரு தனிவீடு மக்கள் நால்வர்க்குப் பிரிவுபடு கின்றது. ஒருமகனைப் பார்த்து, இஃது யார்வீடு என்றால், எங்கள் பொதுவிடு என்பான். பின்னும் அவனை, இவ்வீட்டகத்து உன் பகுதி யாது என வினவினால், தன் வாழ்க்கைக்கு உரிய தனியிடத்தைச் சுட்டுவான். அத்தனியிடமே அவன் செய்கைக்கு நிலைக்களமாவது. அனைத்து நிலையினரையும் உட்கொண்ட பல நிலைக்குறள்களின் தொகுதியாதலால், திருக்குறள் பொது நூல் எனப்படும். பொது நூல் என்ற பெயரினுங் காட்டில் தொகை நூல் என்பதுவே உண்மை. திருக்குறள் பொது வீடே யொழியப் பொதுமடம் அன்று என உணர்க.

யான் ஆர் என் உள்ளம் ஆர் எனத் தன்னிலை கண்டு. என் நிலைக்கு ஏற்ற - யான் இதுபோது செய்தற்கு வாய்ந்த - குறள்கள் இவை இவை என நாடி, தன்னிலைக்குறள்களைப் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். “என் வாழ்வில் முன்னரே செயலாகிச் செரித்த குறள்கள் இவை: இன்றே செயலுக்குக் கொளவேண்டும் குறள்கள் இவை: உடனடிச் செயலுக்கு வாராவாயினும் என் உள்ளத்தே இன்று முதற் கிடந்து ஊறுகாய் போல் பதமாக வேண்டும் குறள்கள் இவை”, என இவ்வண்ணம் அவரவர் அற்றை நிலைக் கேற்ப, ஆற்றற் கேற்ப, விழைபயனுக் கேற்ப, குறளறிவுப் பகுப்பு வேண்டும். இதுவே செயல் வழியாகும். இப்பகுப்பும் செயலுமில்லாக் குறட்கல்வியால், அகத்துய்மைக்கு உதவாப் பொதுப் பறையால், உலகம் கண்ட பயனென்னோ குறட்பிறப்பின் பயனென்கொல்? கேடல்லது, சாப்பறையல்லது காணும் விளைவு என்னோ? ஓர்மின்! கேள்வி நண்பர்களே என் சொற்பொழிவிற்கு ஒரு நல்ல பயன் கண்டேன். எல்லோர்தம் கையகத்தும் திருக்குறட்சுவடி. இஃதோர்