பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநிலையறம் 57

அழகிய உளங்கவர் காட்சி. குறட்பொழிவு கேட்க வருவாரனை வர்க்கும் குறள் முழு நூலொன்று வழங்க ஒரன்பர் முன்வந்தனர். அவர் வரவு நல்வரவு. அவர் நூற்கொடை கொள்ளத்தக்கதாயினும், நான் இடைமறித்தேன். “திருக்குறள் என் வாழ்க்கைச் சுவடி என்று உணர்ந்து அவரவரும் தாமே வாங்கிக் கற்கும் நாள் வரும்; உழைத்து ஈட்டிய தன் பொருளால் திருக்குறள் யாரும் பெறுகதில்” என்று அவர்க்கு ஏதுக் காட்டினேன். தன் முயற்சி உங்கள்பால் காண விழைந்தேன். என் நம்பிக்கை கொண்ட அன்றே செயலாயிற்று. மாணாக்கர் பள்ளிக்குப் பாடநூல் சுமந்து வர நாணி வழக்கமாக மறக்கும் இவ்விருபதாம் நூற்றாண்டில், கேள்வியாளர் நூலேந்திச் சொற்பொழிவு கேட்க வருப. அவர் தம் ஆர்வம் வாழிய!

பிறிதொரு நற்செய்தி. குறளுரை செய்யும் என்பால் ஓரச்சம் ஒட்டியிருந்தது. “பெரும்பாலும் குறட் பகுதிகளையும் முழுக் குறள்களையும் சொற்பொழிவில் காட்டிச் செல்கின்றோமே காட்டுங் குறளின் சொற்பொருளை விளக்கவில்லையே; பொழிப்புப் பொருள் தெரிந்தன்றோ பொருள்நுண்மை விளங்கவேண்டும்; மேற் பொருளையும் விளக்கி நெஞ்சப் பொருளையும் உடன் விரிப்ப தாயின், என்னாம், விளக்கம் வேண்டாது மிகுந்து, செயற்பயன் குறைந்து கருத்துத்தரம் குறையுமே, என்செய்வல்” என்று அஞ்சினேன். வள்ளுவர் நெஞ்சமாம் முதற் சொற்பொழிவைக் கேட்டார் பலரிடம் இச்சிக்கல் பற்றி உசாவினேன். எனக்கோர் நீண்ட ஆறுதல் மொழி தந்தனர். “கேள்வியாளர் பலர் தமிழறிவும் சான்ற வர்” என்று சொல்லினர். “முன்னர் குறள் கல்லாருங்கூடத் திருக் குறட் பொழிவு செவிப்படுதற்கென்றே, சின்னாளாய்ப் பொழு தனைத்தையும் குறள் படிப்பான் செலவிடுப” என்று மனம் இனிக்க மொழிந்தனர். இதுகாறும் எழுத்து மணம் நுகராத் தமிழருங்கூடத் திருக்குறள் கற்கும் ஒரே நோக்கொடும் ஒரே மூச்சொடும் தமிழ் பயில்வதாக, எவ்வளவு உயர்ந்த புதிய செய்தியைத் தெரிவித் தார்கள். இனைய நல்ல பல முற்படு செய்திகளைக் கேட்டு நாமனை வோரும் உவகை யடைகின்றோம். மனம் பொய்யா முயற்சியுடையார் வாழிய!