பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 61

நிலையில் வாங்கிக் கொள்வதால், எல்லாம் விற்பனையாகி விடுகின்றன.

திருக்குறட் சந்தைப் பொருள்கள் எல்லாம் செய்வதற்கு உரியனவே; என்றாலும், அனைத்துக் குறள்களும் ஒருவர் வாழ்க்கையில் ஒரு நிலைக்கண் மேற்கொள்ளுதற்கில்லை. என் மனத்திட்பம், அறிவு வளர்ச்சி நிலைகளுக்கு ஒப்பவும், என் வாழ்வு ஏற்கும் பிற ஆற்றற்குத் தகவும், “அளவறிந்து உண்க என்றபடி யான் செய்தற்குரிய குறள்களையே வள்ளுவச் சந்தையில் எடுத்துக் கொள்வேன். நும் மனவறிவு நிலைகளுக்கு ஒப்ப, யான் தேர்ந்து கொண்ட குறள்களையோ இவற்றோடு வேறு பலவற்றையோ நீவிரும் எடுத்துக் கொள்வீர். இங்ஙன் அவரவர் உண்டற்கு உரிய ஊணளவுபோல், செயற்குரிய குறள்களை ஒருவர் அல்லர், பற்பலர் பலப்பல வாழ்க்கை நிலைகளில் மேற்கொள்வதால் எல்லாக் குறள்களும் பல்லோர் வாழ்க்கைத் தொகுதியில் செயலாகி அமைகின்றன.

சந்தைக்கண் வணிகர் பலர் உளர். காசுக்குச் சரக்கு விற்பர். அவர் சரக்குக் குவியல் நாம் வாங்குதொறும் குறைவுபடுவது; முந்திக் கொள்ளாவிடின் பெருங்காசுக்கும் சில சரக்கு கிடைப்பது அரிதா யொழியும். இக்குறைகள் அற்றது திருக்குறட் சந்தை. வள்ளுவர் ஒருவரே வணிகர். வணிகர் மட்டுமல்லர், மருந்தும் தானே செய்து மருத்துவமும் உடன் செய்யும் தமிழ் மருத்துவன்போல், குறளும் தாமே விளைத்துக் கொடுப்பதனையும் நேரடியாகச் செய்யும் வணிகவுழவர். இவ்வுழவரும் தம் குறட் சரக்குக்களுக்கு அணித்து இருக்க மாட்டார். ஒருவன் அளந்து கொடுக்க ஒருவன் வாங்கும் விற்பனைப் பண்டம் போலாது, குடங்கொண்டு முகக்கும் குளத்து நீர் போலவும், விழைந்தாங்கு எடுத்துக் கொள்ளும் மேலைநாட்டு விருந்துபோலவும், தடையின்றி அவரவர் தாமே கொள்ளக் கிடப்பது குறட்பண்டம். காசில்லை, கடனில்லை, வணிகனில்லை என்று குறள்களை மனத்து நிரப்பிக் கொண்டாலோ, வாழ்வு செரிக்காது. எப்போதும் கொள்ளக் கிடப்பது தானே என்று நிலைக்குக் குறையக் கொண்டாலோ, வாழ்வு பட்டினிப்படும். குடும்பப் பொருளைக் குழந்தை கொள்ளுமாப்போல் மிகுத்தும் குறைத்தும் குறள்களைக்