பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 63

நிலை சார்ந்த குறள்களை நாடி மேற்கொள்ளற்கேனும் ஒருவர்க்குத் திருக்குறள் முழுநூற் கல்வி வேண்டும் என்பது ஒரு பெரும் விடையாகாது என்று நானே ஒத்துக்கொண்டேன். ஏன்? ‘அகர முதல எழுத்தெல்லாம் என்ற முதற் குறள் தொடங்கி, கோலும் தாளும் வைத்துக்கொண்டு, ஒருவர் கற்கிறார். இடையிடை தந்நிலைக்கு அமைந்த குறள்களைப் பொறுக்கி எழுதிக் கொள்கிறார். ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்னும் ஈற்றுக் குறளைக் கற்று முடித்தபின், பொறுக்கிய குறள்களே தம் வாழ்வுச் செயலுக்கு உரியன என்று தொகுத்துக் கொள்கிறார். அவர் சேர்த்த குறள்கள் இருநூறு என்று கொள்வோம். இவ்விருநூறும்தாம் அவர் நிலைக்கு வேண்டும் குறள்கள் எனவும், மற்றை ஆயிரத்தெச்சமும் அவர்க்கு உதவாக் குறள்கள் எனவும் கருத்தாகுமா? ஒருவர் நிலை என்பது வாழ்நாள் காறும் மாறாத தொன்றா? வளர்ச்சியுடைப் பொருட்கு மேலோ கீழோ நிலைப் பெயர்ச்சி என்பது உண்டன்றோ? சந்தைக்கண் வாங்கிய சரக்குகளைத் தவிர ஆண்டுப் பிறசரக்குக ளெல்லாம் வேண்டாதன என்றா பொருள்படும் அற்றைநாட் செலவிற்கு வேண்டாதன சில; முன்னரே கைவசம் இருத்தலின் விரும்பாதன சில: செலவிருக்கும்போது வாங்குவோம் என்று விட்டுவைப்பன சில: செலவிருந்தும் பொருள் வலிக்கு விஞ்சியன என்று எண்ணி விழையாதன சில. இஃதோர் உலகவியல்பு. இவ்வுவமைத் தொடர்ச்சியை நிலையடிப்படை விளக்கத்திற்கு ஒரு தெளிவு கருவியாக நினைக.

திருக்குறள் கற்கும் பெருமக்கள் தந்நிலைக்குப் பொறுக்கியன நிற்க, பிற குறள்களெல்லாம் தமக்கு என்றும் வேண்டாதன என்பது நினைப்பரிய பெரும் பிழை. பால்குடி மறந்து உண்ணப் பயின்ற குழந்தை தாய் வேண்டாம் என்பதை ஒப்பது. செய்த குறள், செய்யுங்குறள், செய்குறள் என்ற செயலடிப்பட்ட முந்நிலைக் கல்வி திருக்குறள் கற்பர்ர் யார்க்கும் ஒருவந்தம் வேண்டற்பாலது. வாழ்க்கையில் நின்றொழுகும் முனைப்பினராய்த் திருக்குறள் ஏந்துவார் யாரும் செயல் முந்நிலைப் பகுத்தறிவு கொண்டு கற்கதில்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (148)