பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வள்ளுவம்

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு (920) ஒ. இவை என் வாழ்க்கையிற் செய்த குறள்கள். இவை கழறும் குற்றங்கள் என்மாட்டு இல. பரத்தை நச்சல், கள்ளுண்டல், சூதாடல் ஆகிய வேட்கைகளை இயல்பில் அறியேன். இக்குணங்கள் தாமே என்பால் அமைந்து கிடப்பன.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க: பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும் (293) புநங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் (183)

மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர் (278)

ஆ. இவை என் வாழ்க்கையில் இதுகாறும் செயற்படாக் குறள்கள். நினைவாலும் சொல்லாலும் செயலாலும் பொய் வாழ்க்கையேன். யாம் மெய்யாகக் கண்டவற்றுள் தலையாய அறம் (300) என்ற நடையில், வள்ளுவர் தம்மையே ஆணைப்படுத்தி மொழிந்த வாய்மை யொழுக்கம் இன்று முதல் என் செயலுக்கு உரியது காண். ஆளைக் கண்டு ஒன்று, காணாது ஒன்று சொல்லித்திரிந்த கயமை யேன். என்னை கொல் ஏதிலார் மாட்டு (188) என வள்ளுவரும் அஞ்சும் புறங்கூற்று இனி ஆகாது காண். மறைந்தொழுகும் மாந்தர் பலருள் நெடுங்காலமாக யானும் ஒருத்தன். மாசு மனத்துப் பெருகவும், தூய்மை விளம்புவான் புறக்கோலம் பூண்ட அறிவுடை வஞ்சகன். ‘வன்கணார்’ என வள்ளுவர் பழித்த, அகங்கூடாப் புறவொழுக்கம் இன்று ஒழிகதில் இவையெல்லாம் யான் இன்று தொட்டுச் செய்யுங் குறள்களாகும்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை .

மறத்தல் அதனினும் நன்று (152) சால்பிற்குக் கட்டன்ளை யாதெனின், தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல் (986)

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாம் தொழும் (268)