பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளுவம்

நன்றியில் செல்வம், நல்குரவு, ஒப்புரவறிதல், ஈகை, ஊழ், ஊக்கமுடைமை, ஆள்வினையுடைமை என்ற அதிகாரங்களில் பலவாகவும், பிற தலைப்புடைய அதிகாரங்களில் சிலவாகவும், பொருட் குறள்கள் பரந்து கிடக்கின்றன. பொருளினை விழைந்தும் வெறுத்தும், பொருள் காரணமாய் மக்களை அறிவுறுத்தியும், புகழ்ந்தும், இகழ்ந்துமாகப் பலநிலைகளில் குறள்கள் பிறந்திருக் கின்றன. பொருள் இன்றியமையாமையை முழுதுணர்ந்த வள்ளுவர் பொருளின் ஆற்றலை, அது நன்மையினும் தீமைக்குக் கருவியாதலை ஒரு ஞான்றும் மறந்தவரல்லர். பொருளிலாதவன் தன் இன்மை துடைப்பான், மனத்துாய்மை கெடுத்துப் பொருளிட்டு கிறான். உடையான் தனிப் பெருஞ் செல்வனாக, எல்லாம் தனதாக, மனம் ஒன்று உண்டு என்பதையும் மறந்து பொருள் குவிக்கிறான். பொருள் என்பது யாது? அதன் பயன் யாது? அதனை ஈட்டும் நெறி யாது? பொருட்கும் தன்னிலைக்கும் உரிய தொடர்பு யாது? வாழ்க்கைக்கு வேண்டும் அளவு யாது? பொருளுக்கும் மனத்துாய்மைக்கும் பொருந்திய அடிப்படை யாது? என்றெல்லாம் மக்கள் வினவிக் கொள்வதில்லை. பொருள் இன்றியமையாதது என்பதற்காக, அதற்கோர் ஒழுக்க வரம்பின்றா போய்விடும் உடலும் கல்வியும் அறிவும் இன்றியமையாதனவெனினும் அவற்றின் வளர்ச்சிக்கும் ஒழுக்க வரம்பு உண்டன்றோ?

இன்றியமையாப் பொருளை ஈட்டற் கண்ணும் செலவிடற் கண்ணும் மக்கள் உறும் பல மாசுகளைக் கண்ட வள்ளுவர் - பொருளல்லது இல்லை பொருள் என்று சிறப்பித்த வள்ளுவரே - யாது கூறினார் பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள (241) என இழித்துரைத்தார். பழி மலைந்து ஆக்கம் எய்துவதைக் காட்டினும், கழி நல்குரவே தலை (557) எனப் பொருளுடைமை யினும் புகழுடைமை காட்டினார். மனம் அழுக்குறினும் உறுக என்று பொருளிட்டல் நன்றா? பொருள் வாராதொழியினும் ஒழிக. என்று மனத் தூய்மை காத்தல் நன்றா என வள்ளுவரை வினவின்,

இன்றி யமையாச் சிறப்பின வாயினும்

குன்ற வருப விடல் (961)