பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வள்ளுவம்

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள் (178)

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான் (163) தன் செல்வம் குறையாமைக்கு வழி பிறன் செல்வத்தைக் கவர விரும்பாமை என்பர். தனக்கு நல்லது வேண்டா; செல்வம் வேண்டா என்று துணிந்தவனே அழுக்காறு கொள்வான் என்பர். தன் பொருள் அழிவு சுட்டி, ஆகாப் பொருட் பற்றைக் குறைப்பர். அச்சுறுத்தி மனமாசுபடாது காப்பர்.

பொருளாவது ஒர் உலகக் கருவி. அக் கருவி குணம் பெருக்கவும் குறை நிரப்பவும் பயன்பட வேண்டும். பொருளாவது பண்டமாற்றும் பொதுக்கருவி என்ற அறிவுத்தெளிவு என்றும் வேண்டும். புறப்பொருளெல்லாம் நல்லதற்கும் தீயதற்கும் பயன்படுதல் ஆளும் மனிதனின் நல்ல தீய மனத்தைச் சார்ந்தது. குணமும் குற்றமும் பொருள் மேலனவல்ல; அதனை ஆள்வான் மேலன. செல்வப் பொருள் தீமைக்கே கருவியாதலை வள்ளுவர் கண்டார். உடைமை உடையானை அழிப்பதைக் கண்டார். உடையான் தான் அழிவதை உணராது மகிழ்வதையும் கண்டார். தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்வதையும் கண்டார். வரைவின் மகளிர், கள்ளுண்ணாமை, சூது அதிகாரங்கள் சான்றாதல் காண்க. நல்லதொன்றினைத் தம் நன்மைக்குப் பயன்கொள்ள அறியா மக்கள் இழிநிலை கண்டு கவன்று,

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்

நன்றெய்தி வாழ்வதோ ராறு (932)

எனப் பொருளழிவு காட்டித் திருத்துவர்.

கல்வியறிவுடையாருங்கூடப் பொருள்மேல் ஆரா வேட்கை யராய்ப் பேதையரோடு ஒருதரமாய் மாசு பட்டும் செல்வம் திரட்ட முயல்வதைக் காண்கின்றோம். பேதைக்கில்லாத் தம் நுட்ப அறிவையெல்லாம், தீய நெறியில் பொருளிட்டம் ஒன்றுக்கே ஆளக் காண்கின்றோம். முறைப்படி களவு செய்வது எப்படி சட்டத்திற்கு உட்பட்டுப் பிறரை வெஃகுவது எப்படி வரி கொடாது பணத்தைப்