பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் நிலை 69

பதுக்குவது எப்படி? எனவாங்கு நுண்ணிய நுழைபுலச் செல்வ ராகக் காண்கின்றோம். காமத்திற்குக் கண்ணில்லை என்பது போலப் பொருளுக்கு ஒர் ஒழுக்கமில்லை என்று நாண் துறந்து அறங்கூறக் காண்கின்றோம். பொருளுலகம் வேறு, நூலுலகம் வேறு என மனக்கொலை செய்யக் காண்கின்றோம். இனைய அறிஞர்களே பிறரெல்லாம் தம்மாட்டு ஒழுங்காக, நாணயமாகப் பொய்ப் புரட் டின்றி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவும் காண் கின்றோம். கல்வி அறிவெல்லாம் உப்பு வீழ் பால்போலத் திரிந்து நிற்ப, நன்மக்களும் அழுக்குற்றுப் பொருள் வேட்டையாடக் கண்ட வள்ளுவர், அஃகியகன்ற அறிவு என்னாம் (175) என்று கடிந்துரைப்பர்.

பொருளாற்றலுக்கும் ஒரெல்லை யுண்டு; அதன் நன்மை தீமைக்கும் ஒரெல்லை யுண்டு. பொருளாற்றல் அஃதுடையான் ஆற்றலைப் பொறுத்தது. அவனாற்றலுக்கும் ஒரெல்லை யுண்டு. ‘எல்லாம் பொருளால் ஆம் என்பது இன்றியமையாமை காட்டும் ஒரு தொடர். குழந்தைப்பேறு உடையார்க்குக் குறைவில்லை என்பது ஒப்பது. பொருளிலார்க்கு இவ்வுலகம் இல் என்றதனால் அஃதுடையார்க்கு இவ்வுலகம் முற்றும் உண்டு என்பது கருத்தன்று காண். “பொய்யனேன் நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன்” என மெய்யன்பர் சுட்டியபடி, கேவலம் ஊனோம்பும் வாழ்க்கை எம்மக்களின் குறிக்கோளும் அன்று. உலக நல்வாழ்விற்குப் பொரு ளோடு, பொருளினும் சிற்ந்த பல பண்புகள் இன்றியமையாதன. அப் பண்புகள் இருப்பின் பொருள் நலஞ் செய்யும்; இன்றேல் பொருள் உடையானைக் கீழறுக்கும். -

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின் (89.7)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும் (899) பொருளாற்றலுக்கு ஒர் அளவு காட்டும் குறள்கள் இவை.

நேர்வழியால் பொருளிட்டுதல் எளிதன்று என்பதுவே பலர் வாய்ச் சொல். பண்புடையான் பெருஞ் செல்வனாதல் உலகத்து அரிய காட்சி. பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை (837) என்றும்,